தீராத இருமலுக்கும் நொடியில் தீர்வு தரும் மாதுளம் பழத்தோல் டீ!!!
Author: Hemalatha Ramkumar9 October 2024, 3:38 pm
மாதுளம் பழம் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை நாம் அறிவோம். ஆனால் மாதுளம் பழம் தோலிலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் இருப்பது பலருக்கு தெரியாது. மாதுளம் பழம் தோலால் செய்யப்பட்ட தேநீர் இருமலுக்கு சிறந்த வீட்டு வைத்தியமாக அமைகிறது. உலர்ந்த அல்லது ஃபிரஷான மாதுளம் பழம் தோலை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர தொண்டை வலி மற்றும் கரகரப்பு குணமாகும். இது தவிர இது செரிமானத்துக்கு உதவி, இதய ஆரோக்கிய மற்றும் ஆரோக்கியமான சருமத்தை அளிக்கிறது.
மாதுளம் பழம் தோலினால் செய்யப்பட்ட தேநீரை எப்படி தயார் செய்வது அதன் பலன்கள் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மாதுளம் பழம் விதைகளில் பல்வேறு பலன்கள் உள்ளது போல அதன் தோளிலும் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் பிற பயோ-ஆக்டிவ் காம்பவுண்டுகள் உள்ளன. இந்த டீயில் உள்ள மருத்துவ பண்புகள் காரணமாக இது பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது போன்ற நன்மைகள் இதில் அடங்கும்.
மாதுளம் பழம் தோல் தேநீர் இருமலுக்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியமா?
இந்த தேநீர் இருமலுக்கு ஒரு அற்புதமான தீர்வாக அமைகிறது. மாதுளம் பழம் தோலில் காணப்படும் டானின்கள், ஃப்ளவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் வீக்க எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
இந்த பண்புகள் அனைத்தும் தொண்டைக்கு இதமளித்து, வீக்கத்தை குறைத்து இருமல் போன்ற தொற்றுகளுக்கு எதிராக சண்டையிடுகிறது. கூடுதலாக இந்த தோலில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதால் சுவாச தொற்றுகளில் இருந்து விரைவில் குணமடைய உதவுகிறது. மேலும் இந்த டீ குடிப்பது சளியை தளர்த்தி, அது எளிதில் வெளியேறுவதற்கு உதவுகிறது. இதனால் உங்களுக்கு இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க: வயிற்று உப்புசத்தோடு போராடி கலைத்து விட்டீர்களா… உங்களுக்கான சில சிம்பிள் ஹோம் ரெமெடீஸ்!!!
மாதுளம் பழம் தோல் பயன்படுத்தி தேநீர் தயாரிப்பது எப்படி?
இந்த தேநீர் செய்வதற்கு உங்களுக்கு 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் உலர்ந்த அல்லது ஃபிரஷான மாதுளம் பழம் தோல், 2 கப் தண்ணீர் மற்றும் தேன் அல்லது எலுமிச்சை சாறு தேவைப்படும். ஒருவேளை நீங்கள் ஃபிரஷான மாதுளம் பழம் தோலை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதனை தண்ணீரில் நன்றாக அலசி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். இதுவே உயர்ந்த தோலாக இருந்தால் அதனை அரைத்து விட்டு உடனடியாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி மாதுளம் பழம் தோலை தண்ணீர் கொதிக்கும் போது சேர்க்கவும். இது 5 முதல் 10 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். பின்னர் அதனை வடிகட்டி விட்டு கூடுதல் ஃபிளேவருக்காக தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து வெதுவெதுப்பாக பருகவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.