நடுவானில் ஓடிய ஆபாசப் படம்.. ஒரு மணிநேர இழுபறி.. பகிரங்க மன்னிப்பு கேட்ட நிறுவனம்!

Author: Hariharasudhan
9 October 2024, 3:51 pm

ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற Qantas விமானத்தில் திடீரென ஆபாசப் படம் ஒளிபரப்பானதால் பயணிகளுக்கு முகசுழிப்பு ஏற்பட்டது.

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் இருந்து கடந்த வாரம் Qantas நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று ஜப்பானில் உள்ள ஹனேடா (Haneda) விமான நிலையத்திற்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் இருக்கும் ஒவ்வொரு இருக்கைகளுக்குப் பின்னாலும் தொடுதிரை வசதியுடன் தாங்கள் விரும்பிய திரைப்படங்களைப் பார்க்கும் வசதியும் உள்ளது.

இந்த நிலையில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஆபாசக் காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றிருந்த திரைப்படம் ஒன்று ஒளிபரப்பாகத் தொடங்கியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அது மட்டுமல்லாமல், நிறுவனம் மீது முகசுழிப்பையும் அடைந்தனர். தொடர்ந்து, இது குறித்து விமான பணிப்பெண்கள் தலைமை விமானிக்கு தகவல் தெரிவித்தனர்.

இருப்பினும், இதற்கான காரணத்தை அறிந்து, ஒளிபரப்பை தடை செய்ய ஒரு மணி நேரம் ஆகிவிட்டதாக அதில் பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர் ரெடிட் (Reddit) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், ஆபாசக் காட்சிகள் உள்ள திரைப்படத்தின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட பிறகு, குடும்பம் மற்றும் நட்பு ரீதியிலான திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதாகவும் வேறு ஒரு பயணி ரெடிட் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: ஏர் இந்தியாவுக்கு வந்த சிக்கல்: பெண் ஊழியர் பலாத்காரம் செய்யப்பட்டாரா?: ஹோட்டல் அறையில் நடந்தது என்ன….!!

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், குவாண்டஸ் ஏர்லைன்ஸ் தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குவாண்டஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பன்னாட்டு ஊடகம் ஒன்றிற்கு அளித்த விளக்கத்தில், “இந்த திரைப்படம் விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் ஏற்றதாக இல்லை. மேலும், இந்த அனுபவத்திற்காக விமானப் பயணிகளிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அனைத்து திரைகளும் குடும்பத்திற்கு ஏற்ற திரைப்படமாக மாற்றப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விமான உணவுகளில் தரமின்மை, விமான பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை, அவசரகால மருத்துவ உதவி, எமர்ஜென்சி கதவைத் திறத்தல், தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளிட்ட காரணங்களால் விமான சேவை தடைபட்ட நிலையில், தற்போது பறக்கும் விமானத்தில் ஆபாசப் படம் ஓடியது பயணிகள் இடையே முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 869

    0

    0