மருமகளை தனிமையில் சந்தித்து உல்லாசம் : மனைவியாக்க நினைத்த மாமனார்.. ‘சிந்து சமவெளி’ படத்தை மிஞ்சிய சம்பவம் !

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2024, 5:07 pm

மருமகளை மனைவியாக்க நினைத்த மாமனார் கம்பி எண்ணும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த G. நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் வள்ளியம்மாள் தம்பதிகள் உள்ள நிலையில் மணிகண்டன் ஆட்டோ டிரைவர் ஆக இருந்து தற்பொழுது வேலைகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மனைவி வள்ளியம்மாள் பக்கத்து கிராமத்தில் ஓட்டலில் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மணிகண்டனின் பெரியப்பாவாண நாகராஜ் இவர் முன்னாள் ராணுவ வீரரான இவர் ஓய்வு பெற்ற நிலையில் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார் ஓட்டுநராக பணியில் இருந்து ஓய்வு பெற்று தற்பொழுது தனது மனைவியுடன் வீட்டில் வசித்து வருகிறார்.

இவருக்கும் வள்ளியம்மாளுக்கும் தகாத உறவு இருந்து வந்த நிலையில் வள்ளியம்மாளுக்கு 17 லட்சம் ரூபாய் கொடுத்து புதியதாக வீடு கட்டி கொடுத்துள்ளார் நாகராஜ், மேலும் வள்ளியம்மளுக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது

இதையும் படியுங்க: ஆம்ஸ்ட்ராங்கை போல பாஜக பிரமுகரை கொலை செய்ய நடந்த சதி.. கடைசி நேரத்தில் டுவிஸ்ட் வைத்த காக்கி!

இந்நிலையில் வள்ளியம்மாள் நாகராசியிடம் இனி நமது உறவு வேண்டாம் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக உள்ளனர் இனிமேல் வேண்டாம் என வள்ளியம்மாள் கூறியதாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது பின்னர் வள்ளியம்மாள் வேறு சில ஆண்களுடன் நெருக்கமாக இருப்பதாகவும் மேலும் ஆண்கள் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து செல்வதாகவும் நாகராஜுக்கு தகவல் கிடைத்துள்ளது பின்னர் நாகராஜ் வள்ளியம்மாளின் கணவன் மணிகண்டனை அழைத்து உங்களுக்கு வேண்டியதை நான் செய்கிறேன் ஏன் உன் மனைவி இப்படி செய்கிறார் என்று கேட்டதற்கு மணிகண்டனுக்கும் நாகராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது

பின்னர் இதனால் விரக்தி அடைந்த நாகராஜ் அதே பகுதியைச் சேர்ந்த பழனி குமார் என்பவரை அணுகி நடந்ததை கூறியுள்ளார் அதற்கு இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மணிகண்டனை தீர்த்து கட்டிவிட்டு வள்ளியம்மாளை உன்னுடன் சேர்த்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார்

இதற்கு வேண்டிய பணங்களை போன் பேன் மூலமாக நாகராஜ் பழனி குமாருக்கு அனுப்பி உள்ளார். பின்னர் கடந்த 1ஆம் தேதி மணிகண்டனை அழைத்த நாகராஜ் பழனி குமாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர் பின்னர் ஜி நாகமங்கலம் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள மாந்தோப்பில் அழைத்துச் சென்று மணிகண்டனுக்கு மது அளவுக்கு அதிகமாக ஊற்றி குடிக்க வைத்து போதையில் கிடந்த மணிகண்டனை கிணற்றில் பாம்பு உள்ளது பார் என்று கூறியதாக தெரிகிறது.

அப்பொழுது பழனிக்குமார் மணிகண்டனை எட்டி உதைத்ததில் கிணற்றில் விழுந்து அவர் படுகாயம் அடைந்த அங்கேயே தண்ணீரில் மூழ்கினார்.

பின்னர் மணிகண்டனின் இரு சக்கர வாகனத்தையும் கிணற்றில் தள்ளிவிட்டு அங்கிருந்து பழனிக்குமார் நாகராஜ் மற்றும் இதற்கு உதவியாக இருந்த பழனி குருமாரின் நண்பர் ராஜ்குமார் ஆகியோர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணிகண்டனின் உடல் தண்ணீரில் மிதந்த நிலையில் அதனை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடலில் காயங்கள் இருந்த நிலையில் சந்தேகத்தின் பெயரில் பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் தலைமையிலான தனிப்பட்ட போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது செல்போன் ஆதாரம் மற்றும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்ட போலீசார் மேற்கொண்ட பொழுது மணிகண்டனை நாகராஜ் ராஜ்குமார் பழனிக்குமார் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வது தெரிய வந்த நிலையில் அவர்கள் பிடித்து போலீசாரின் கிடுக்குபிடி விசாரணையில் கொலை செய்தது அம்மலமானது.

பின்னர் அவர்கள் கைது செய்த கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தம்பி மகனை கொலை செய்துவிட்டு அவரது மனைவியை தனது ஆசைக்கு கொண்டு வர முயன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 286

    0

    0