இந்தியாவில் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்து போகும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சுகாதாரத்துறை இது சம்பந்தமான தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. டெங்கு காய்ச்சல் மட்டுமல்லாமல் சிக்கன் குனியா மற்றும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் மட்டுமே 1294 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 22 நாட்களில் மட்டும் 200 நபர்கள் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
பொதுவாக டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி தொற்று ஏற்பட்ட 4 முதல் 10 நாட்களுக்கு பிறகு தான் ஆரம்பிக்கும். இந்த வைரஸ் தொற்றானது ஏஜிஸ் ஏஜெப்டி என்ற கொசு காரணமாக ஏற்படுகிறது. இது லேசான மற்றும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி போன்றவை 3 முதல் 7 நாட்களுக்கு மேல் நீடித்தால் நீங்கள் நிச்சயமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள்.
திரவங்களை எடுத்துக் கொள்வது மற்றும் வலி நிவாரணிகள் போன்றவை டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சைகள். மோசமான சூழ்நிலையில் ஒரு சில நோயாளிகளுக்கு மருத்துவமனையில் பராமரிப்பு தேவைப்படுகிறது. டெங்கு காய்ச்சலில் இருந்து ஒருவர் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வேண்டும். மழைக்காலம் வந்து விட்டதால் கொசுக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆகையால் இந்த நோயிலிருந்து தப்பிப்பதற்கு நாம் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிச்சயமாக எடுக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில் வேப்பிலை தண்ணீர் நமக்கு மிகப்பெரிய மருந்தாக அமைகிறது. முழுக்க முழுக்க பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட வேப்பிலை டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க உதவுகிறது. டெங்கு காய்ச்சலினால் அவதிப்பட்டு வருபவர்கள் ஒரு நாளைக்கு 2 முறை வேப்பிலை தண்ணீர் குடிக்க பரிந்துரை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: தீராத இருமலுக்கு நொடியில் தீர்வு தரும் மாதுளம் பழம் தோல் டீ!!!
இதற்கு 200ml தண்ணீரில் வேப்பிலை, வெட்டிவேர், சுக்கு, சோம்பு, மிளகு ஆகியவற்றை பொடி செய்து கொதிக்க வைத்து தண்ணீர் 50 ml ஆக மாறும் வரை காய்ச்சி பருக வேண்டும். ஒரு வேலை உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் 5 நாட்களுக்கு இதனை தினமும் ஒரு முறை எடுத்து வரலாம். குழந்தைகளுக்கு இதில் பாதி அளவு கொடுத்தால் போதுமானது.
இந்த வேப்பிலை தண்ணீரை தயாரித்த உடனேயே பருகிவிட வேண்டும். மீண்டும் சூடுப்படுத்தி பருக கூடாது. கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதால் அதனை சமாளிப்பதற்கு இந்த இயற்கை வைத்தியம் நிச்சயமாக நமக்கு உதவும். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிரேசில் மற்றும் பிற தென் அமெரிக்கா நாடுகள் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
0
0