வேட்டையன் திரைப்படம் என்கவுண்டர் விவாதத்தின் பின்னணியில் நீட் தேர்வில் ஏழை மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் பேராசை கிழித்து தொங்க விட்டிருக்கிறது. கன்னியாகுமரியில் எஸ்பி அதிகாரியாக இருக்கும் அதியன் (ரஜினி) என்கவுண்டர் ரவுடிகளை சுட்டு தள்ளுகிறார் .
அந்த வரிசையில் வழக்கு ஒன்றில் அவர் நிகழ்த்தும் ஒரு என்கவுண்டர் ஒரு அப்பாவியை பலி வாங்கி விடுகிறது. அந்த வழக்கு மனித உரிமை அதிகாரியும் நீதிபதியுமான சத்திய தேவ் விசாரணை குழுவிடம் வருகிறது. அந்த அப்பாவிக்கு நீதி கிடைக்கும் விவகாரத்தில் ஜெயித்தது காக்கி சட்டையா? அல்லது கருப்பு சட்டையா? என்பதற்கான பதில் தான் வேட்டையன் படத்தின் மொத்த கதை .
என்கவுண்டர் அதிகாரியாக நடை, உடை, பாவனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடி காட்டி இருக்கிறார். அதே நேரத்தில் போலீஸ் அதிகாரியாக அவர் நடிப்பில் காட்டிய நிதானம் நடிகன் ரஜினியின் அடையாளத்தை மேலும் எடுத்துக்காட்டுகிறது.
அதேபோல் ஹிந்தியில் ஸ்டார் நட்சத்திர நடிகரான அமிதாப்பச்சன் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்து கொடுத்திருக்கிறார். விஜய்யின் அப்பாவித்தனமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. பகத் பாசிலின் திருடன் வேடம் மிகச் சிறப்பாக அமைந்தது. ஒவ்வொரு நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு பிரம்மாதமாக இருந்தது.
மேலும், மஞ்சு வாரியர் நேர்மை மனைவிக்கான அடையாளமாக இந்த திரைப்படத்தில் தென்படுகிறார். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங் தனது முதல் தோற்றத்தாலும் தன்னுடைய நடிப்பாலும் பின்னி பெடலெடுத்துவிட்டார். அதேபோல் வில்லன் வேடத்தில் நடிகர் ராணா ரகுபதி இந்த திரைப்படத்தில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தை ஈர்த்து விட்டார்.
இந்த திரைப்படத்தில் இயக்குனர் தா. செ ஞானவேல் ரஜினியின் நடை உடை பாவனை என அவருக்கே உரித்தான ஸ்டைலில் மிகவும் இயற்கையாக அவரை காட்சிப்படுத்திய விதம் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் மிகவும் அழுத்தமான சோசியல் மெசேஜ் ஒன்றை கூறியதன் மூலமாக அனைத்து வாலிப வட்டத்தின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்கள்.
ரஜினியின் இந்த என்கவுண்டர் விவாதத்தின் பின்னணியில் நீட் தேர்வில் ஏழை மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அதன் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் பேராசை என அனைத்தையும் அப்பட்டமாக போட்டு கிழித்து காட்டி தொங்க விட்டுவிட்டார்கள்.
இதில் வசனங்கள் அனைவரது கைதட்டலுக்கும் உள்ளாகி இருக்கிறது. மேலும் அனிருத் இசை சிறப்பாக இருக்கிறது. அனிருத் முந்தைய படங்களை விட இந்த படங்களுக்கு தேவையான அளவு கரெக்டாக அளவான இசை கொடுத்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்: ஜெயிலர் வசூலை துவம்சம் செய்திடும்…. “வேட்டையன்”னுக்கு அமோக வரவேற்பு – PUBLIC REVIEW!
ஆனால், ரஜினியின் முந்தைய படங்களில் இடம் பெற்ற சஸ்பென்ஸ் மூவ்மெண்ட்ஸ் மிகவும் குறைவு என்று சொல்லலாம். இந்த திரைப்படம் ரஜினியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது மொத்தத்தில் வேட்டையன் திரைப்படத்தை திரில்லரான போலீஸ் இன்வெஸ்டிகேஷன் ஸ்டோரியை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டால் நிச்சயம் வேட்டையன் படத்தை பார்க்கலாம்.