நீங்க நினைச்சா மாதிரியே நீளமா, கரு கருன்னு, அடர்த்தியான தலைமுடிய பெற ஒரு இரகசிய பொருள் இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
10 October 2024, 1:15 pm

பல நூற்றாண்டுகளாக குறிப்பிட்ட சில மூலிகைகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்கள் தலைமுடி, சருமம் மற்றும் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய மருந்துகள் மற்றும் எண்ணெய்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட ஒரு அதிசய பொருள்தான் பிருங்கராஜ். இது நம்முடைய தலைமுடியை வலிமையாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவித்து, இளநரையை போக்கி, பொடுகு பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளித்து, தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குவதற்கு பிரிங்கராஜ் எண்ணெய் பெயர் போனது. 

இந்த எண்ணெயில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. உங்களுடைய தலைமுடிக்கு பிரிங்கராஜ் எண்ணெய் பயன்படுத்துவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நீங்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை இப்போது பார்க்கலாம். 

முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது 

எல்லா பெண்களுக்குமே தங்களுக்கு நீளமான, அழகிய கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பிரிங்கராஜ் எண்ணெய் பெண்களின் இந்த ஆசையை நிறைவேற்றி வைக்கிறது. கால்களில் ரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, தலைமுடி வேர்களுக்கு தேவையான போஷாக்கை அளிப்பதன் மூலமாக புதிய முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதற்கு 10 நிமிடங்கள் உங்கள் தலைமுடியில் பிரிங்கராஜ் எண்ணெயை தடவி மசாஜ் செய்ய வேண்டும். 

தலைமுடி உதிர்வை குறைக்கிறது 

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் மற்றும் மோசமான உணவு காரணமாக மன அழுத்தம் தொடர்பான தலைமுடி உதிர்வு ஏற்படலாம். இதற்கு உங்களுடைய தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது மிகவும் அவசியம். ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் இது தலைமுடிக்கு வலு சேர்த்து தலைமுடி உதிர்வதை குறைக்கிறது. 

தலைமுடி வேர்களுக்கு வலு சேர்க்கிறது 

தலைமுடி வேர்கள் பெரும்பாலும் வறண்ட, பிளவு முனைகள் போன்றவை மூலமாக வெளிப்படும். சுற்றுச்சூழலில் உள்ள தூசு, மாசுபாடு, UV கதிர்கள் மற்றும் தலைமுடியை அழகுபடுத்துவதற்கு நீங்கள் பயன்படுத்தும் சாதனங்கள் ஆகியவை காரணமாக தலைமுடி பொலிவிழந்து காணப்படும். இவற்றை சரிசெய்து தலைமுடிக்கு வலு சேர்ப்பதற்கு பிரிங்கராஜ் எண்ணெய் பெரிய அளவில் கைகொடுக்கும். 

மேலும் படிக்க: உலக மனநல தினம் 2024: IVF வெற்றி பெறுவதில் மன அழுத்தத்தின் தாக்கம்!!!

இளநரையை போக்குகிறது 

முதுமை என்பது நாம் அனுபவிக்க வேண்டிய ஒரு அழகான பயணம்தான். ஆனால் அது முன்கூட்டியே ஏற்பட்டு விட்டால் அது நம்முடைய தன்னம்பிக்கையை குறைத்து விடும். இளநரை என்பது ஊட்டச்சத்து குறைபாட்டை குறிக்கிறது. இதனை பிரிங்கராஜ் எண்ணெய் மிக எளிதாக சரிசெய்து விடுகிறது. 

பொடுகை கட்டுப்படுத்துகிறது பிரிங்கராஜ் எண்ணெயில் வீக்க எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அது வறண்ட மற்றும் பொடுகு நிறைந்த மயிர்கால்களை சரிசெய்கிறது. அதுமட்டுமல்லாமல் சொரியாசிஸ் காரணமாக ஏற்படும் அறிகுறிகளில் இருந்தும் பிரிங்கராஜ் எண்ணெய் நிவாரணம் அளிக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!