அர்னவ் – அன்ஷிதா லீலைகள் இனிதே ஆரம்பம்…. மாமா வேலையை துரிதப்படுத்தும் விஜய் TV!

Author:
10 October 2024, 1:36 pm

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதே கொஞ்சம் புது விதமாக ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே போட்டி, சர்ச்சை, சண்டைகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் கான்ட்ரவசி கிரியேட் பண்ண வேண்டும் என்ற நோக்கத்திலேயே சிறப்பாக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக விஜய் டிவியும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் போட்டியாளர்களை உள்ளே இறக்கி விட்டிருக்கிறார்கள்.

divya arnav

அந்த வகையில் பிரபல சீரியல் நடிகரான அர்னவ் மற்றும் சீரியல் நடிகை அன்சிதா இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்று இருப்பது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

காரணம் ஏற்கனவே சீரியல் நடிகையான திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அர்னவ். இவர்களது திருமணம் ரகசியமான முறையில் நடந்தாலும் அர்னவ் திவ்யாவை கர்ப்பமாக்கி ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு சமயத்தில் அர்னவ் திவ்யாவை ஏமாற்றி அவரை பிரிந்து விட்டார்.

divya -updatenews360

இதனிடையே சீரியலில் நடித்து வந்த போது நடிகை அன்ஷிதாவுடன் தகாத உறவில் இருந்து வந்து அவருடன் கள்ளக்காதல் முறையில் உறவு கொண்டிருக்கிறார். இந்த விஷயம் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதை எடுத்து சீரியல் நடிகையான திவ்யா அன்ஷிதா மற்றும் அர்னவ் மீது பகிரங்கமாக புகார்களை தெரிவித்து வந்தார் .

இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து தற்போது இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டு இருப்பது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. அன்ஷிகா மற்றும் அர்னவ் இருவரும் ஆடியன்ஸின் வெறுப்புக்குரிய போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

ஆம், இவர்களின் கள்ளக்காதல் ரொமான்ஸ் உள்ளிட்டவை மக்களுக்கு சகிக்க முடியாத வகையில் இருப்பதாகவும் அவர்கள் கூறி வருகிறார்கள். எத்தனை பேர் நாமினேட் செய்து இவர்களை எவிட் பண்ண வேண்டும் என கூறினாலும் கூட விஜய் டிவி நிச்சயம் அர்னவ் மற்றும் அன்ஷிதாவை அவ்வளவு சீக்கிரம் எவிட் . செய்யவே செய்யாது.

காரணம் அவர்களை வைத்து தான் கண்டன் கிரியேட் செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் தான் அவர்களை உள்ளே அனுப்பி வைத்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நிச்சியம் அர்னவ் மற்றும் அன்சிதாவை வைத்து டிஆர்பி ஏற்ற வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் கள்ளக்காதல் ரொமான்ஸ்களை நாளுக்கு நாள் அதிகரிக்க செய்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:வேட்டையன் குறி தப்பியதா? தட்டி தூக்கியதா? திரைவிமர்சனம்!

இது பார்ப்பதற்கு சகிக்கும்படியாக இல்லை. இதை பார்த்து நெட்டிசன்ஸ் பலரும் கட்டின மனைவியை அடித்து கொடுமை செய்துவிட்டு பெற்ற மகளை இதுவரை ஒரு முறை கூட பார்க்காத உனக்கு அவர்கள் மீது வராத பாசம் அவர்களுக்காக வராத அழுகை தன்னுடன் சீரியல் நடித்த கள்ளக்காதலிக்காக வருகிறதா?
என அர்னவை வச்சு செய்து விமர்சித்து வருகிறார்கள். இனி வரும் நாட்களில் அர்னவ் மற்றும் அன்சிதாவின் கள்ளக்காதல் ரொமான்ஸ் விரைவில் எதிர்பார்க்கலாம். அதை வைத்து தான் விஜய் டிவி டிஆர்பி ஏத்தி கேம் விளையாட போகிறது என்பது நிதர்சனமான உண்மை. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று…

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 293

    0

    0