பொது கழிப்பிடத்தில் தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை.. பக்கெட்டில் போட்டு மாயமான தாய்!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2024, 2:20 pm

பொதுக்கழிப்பிடத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை பக்கெட்டில் வைத்து மூடி மாயமான தாய் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தில் உயிருடன் பெண் குழந்தை ஒன்று கிடப்பதாக கழிப்பிடத்திற்கு சென்றவர்கள் கூறியுள்ளனர்.

இதன் பேரில் கழிப்பிடத்தை நிர்வகிக்கும் ஊழியர்கள் சென்று பார்த்த போது தொப்புள் கொடியுடன் பிறந்த உயிருடன் உள்ள பெண் குழந்தையை தரையில் கிடத்தி கழிப்பிடத்தில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டால் மூடி வைத்துவிட்டு குழந்தையை பெற்றெடுத்த பெண் மாயமாகியுள்ளார்.

உடனடியாக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் ஆட்டோவில் குழந்தையை தூக்கிக் கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

நவீன கட்டண கழிப்பிடத்திலேயே குழந்தையை பெற்றெடுத்து விட்டு குழந்தையை போட்டுவிட்டு சென்றாரா? இல்லை யாருக்கும் தெரியாமல் குழந்தையை மறைத்து எடுத்து வந்து கழிப்பிடத்தில் கிடத்தி விட்டு சென்றாரா என்ற கோணத்தில் இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 536

    0

    0