நித்யானந்தா உடன் தான் இருக்கிறேன்.. ரஞ்சிதா வெளியிட்ட பகீர் தகவல்!
Author: Hariharasudhan10 October 2024, 4:27 pm
நித்யானந்தா உடன் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா, தற்போதும் நித்யானந்தா உடன் தான் இருக்கிறேன் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிபடுத்தியுள்ளார்.
சென்னை: ஓவர் நைட்டில் வேர்ல்ட் ஃபேமஸ் ஆனவர்களில் ஒருவர் தான் நடிகை ரஞ்சிதா. 1990களில் ஜாக்கெட் இல்லாமல் பாரதிராஜாவின் ‘நாடோடி தென்றல்’ படத்தில் நவரச நாயகன் கார்த்திக் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஞ்சிதா. ‘மணியே மணிக்குயிலே’ என்ற எவர்கிரீன் பாடலின் நாயகியாக வலம் வந்த ரஞ்சிதா, அன்றைய காலக்கட்டத்தின் முன்னணி நடிகர்களான பிரபு, முரளி உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து ரசிகர்களைப் பிடிக்கத் தொடங்கினார்.
ஆனால், ‘கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துருச்சு’ என்ற பாடலின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார் என்றுதான் கூற வேண்டும். காரணம், ‘திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்கென்று கல்யாணம்’ என்பதைப் போன்று தேசப்பற்று படத்தில் இது எங்கிருந்து வந்தது என, ‘ஜெய்ஹிந்த்’ படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலில் படு கிளாமராக கண்ணால் வசியம் செய்தார் ரஞ்சிதா. இருப்பினும், அதனையே அவர் தொடர்வில்லை. தொடர்ந்து, பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.
இதனிடையே, ராகேஷ் மேனன் என்ற ராணுவ வீரரை திருமணம் செய்து கொண்ட ரஞ்சிதா, சினிமாவில் இருந்து விலகினார். பின்னர், யாரும் எதிர்பார்க்காத நிலையில், நடிகர் விஜயின் ஜோடியாக ‘வில்லு’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல், ராவணன் படத்திலும் பிரபுவின் மனைவியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தான், ஆன்மீக நபராக கருதப்படும் நித்யானந்தா உடன் ரஞ்சிதா உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், ‘அதில் இருப்பது நான் இல்லை, நான் இல்லவே இல்லை’ என நான் அவன் இல்லை பட பாணியில் மீண்டும் மீண்டும் ஊடகங்களின் முன்னால் கூறினார். இருப்பினும், அதனை நம்புவதற்கு யாரும் முன்வரவில்லை. ஏன், அவரது கணவரும் அவரை விட்டுப் பிரிந்தார். ‘அவரும் எவ்வளவு பொறுமையாக இருப்பார்?’ என தனது கணவரின் பிரிவு குறித்து ரஞ்சிதா கூறியிருந்தார். மேலும், கைலாசா என்ற தனி ஒரு நாட்டை நித்யானந்தா உருவாக்கி உள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் பிரதமராக ரஞ்சிதா செயல்படுவதாகவும் பல்வேறு இணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் ரஞ்சிதா பேட்டி அளித்துள்ளதாக வீடியோ ஒன்று வெளியானது. அதில், “என் மரியாதையை ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து துகிலுரித்துவிட்டனர். நான் பெரிய பணக்கார வீட்டுப் பெண் இல்லை, எனது தந்தை ஒரு தொழிலதிபரும் இல்லை. ஒரு சாதாரண நடுத்தரப் பெண்ணாக, என்னால் இந்தச் சம்பவத்தில் இருந்து வெளியில் வர முடியவில்லை. இதுதொடர்பாக நடந்த வழக்கில் இருந்தும் என்னைக் காப்பாற்ற எனது தந்தையால் முடியவில்லை.
இதையும் படிங்க: கா*** கைவிட்டு வீடியோ எடுத்த கேமராமேன் – அதிர்ந்துப்போன ராஷ்மிகா!
ஏன், எனக்கென்று யாரும் இல்லை. இந்த பிரச்னையை எல்லாம் நினைத்துக் கொண்டே, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு கூடச் சென்றேன் (தற்கொலை எதற்கும் தீர்வல்ல). ஆனால், என்னை தவிர்த்து, எனது குடும்பத்தைக் காக்க ஆள் இல்லை என நினைத்து சமாதானமாவேன். நான் நடிகையாக இருந்த நேரத்தில் வந்த கிசுகிசு எல்லாம் படப்பிடிப்பு இல்லாத வேளையில், நான் புத்தகமும் கையுமாக இருப்பேன் என்பது தான் (ரஞ்சிதா ஷூட்டிங்கில் புத்தகத்துடனே இருப்பார் என அந்நாட்களில் ஊடகங்களில் கிசுகிசுக்கள் வெளியானது). ஆனால், இப்போது அந்த புத்தகங்கள் தான் என்னை அமைதியாக்கி பக்குவப்படுத்தி இருக்கிறது.
ஆனால், அந்த கசப்பான அனுபவம் தந்த வலி என்னை விட்டுச் செல்வதற்கு முன்பே என் கணவர் என்னை விட்டு விலகிவிட்டார். எனக்கு நடந்த விஷயங்களை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அனைத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதால், அவரால் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே, நாங்கள் பிரிந்துவிட்டோம். என் இளமைக் காலத்தில் இருந்தே கடவுள், ஆன்மீகம் மீது அதிகம் பற்று வைத்துள்ளேன். அதை இன்றுவரை கடைபிடிக்கிறேன். என்னைப் பற்றி எத்தனையோ விமர்சனங்கள் எழுந்திருக்கலாம். ஆனால், நான் இன்றும் நித்யானந்தாவின் பக்தையாகத்தான் உள்ளேன். இப்போதும் அவருடன் தான் இருக்கிறேன், இனியும் அவருடன் தான் இருப்பேன். ஆன்மீக வழியில் செயல்படுவேன்” எனக் கூறியுள்ளார் ஸ்ரீவள்ளி என்ற இயற்பெயர் கொண்ட நடிகை ரஞ்சிதா.