ஒடிசாவில் தமிழக ரவுடியை என்கவுன்டர் செய்ய திட்டம்? பதறிப் போய் ஆட்சியர் முன் திரண்ட உறவினர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan11 October 2024, 3:58 pm
ஒடிசாவில் உள்ள தூத்துக்குடியை சேர்ந்த ரவுடியை போலீசார் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கூட்டுடன் காடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் இவர் மீது குடும்ப பகை காரணமாக கொலை செய்தது தொடர்பாக 5 கொலை வழக்குகள் உள்ளது.
இது தொடர்பாக வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது இந்நிலையில் லட்சுமணன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் இரண்டுக்கும் மேற்பட்ட என்கவுண்டர்களை செய்துள்ள உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் இன்று காலை ஒடிசா மாநிலம் மூசிறப்பள்ளி ரயில் நிலையத்தில் வைத்து லட்சுமணனை கைது செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஒடிசா மாநிலத்தில் வைத்து காவல்துறையினரிடம் அவர் தங்களிடம் இருந்து தப்ப முயற்சி செய்து உள்ளார் என தூத்துக்குடி காவல்துறையினர் சான்று பெற்றுள்ளதாக கூறப்படுகிறது
இதை அடுத்து லட்சுமனின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்கள் பிஎம் டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடும்பப் பகை காரணமாக உள்ள சொந்த கொலை வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ள நிலையில் தற்போது லட்சுமணனை காவல்துறையினர் கைது செய்து என்கவுண்டர் செய்ய திட்டம் தீட்டி உள்ளதாக தங்களுக்கு தகவல் வந்துள்ளது.
எனவே இதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் லட்சுமணனை எங்கு வைத்துள்ளனர் எதற்காக கைது செய்தனர் என்ற விவரம் குறித்து காவல்துறையினர் இதுவரை உறவினர்களிடம் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை எனக் கூறும் அவர்கள் லட்சுமணனை காவல்துறையினர் மனித உரிமைகளை மீறி அவரை என்கவுண்டர் செய்யக்கூடாது என வலியுறுத்தினர்.
மேலும் இது தொடர்பாக தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு காவல் துறை தலைவர் மற்றும் நீதிமன்றங்கள் ஆகியவற்றுக்கு மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்