தேங்காய கடவுளின் பழம்னு சும்மாவா சொன்னாங்க…!!!

Author: Hemalatha Ramkumar
11 October 2024, 4:54 pm

பெரும்பாலான நபர்களுக்கு தேங்காய் என்றால் மிகவும் பிடிக்கும். நாம் சமைக்கும் உணவுகளின் சுவையை கூட்டி கொடுக்கக் கூடியது இந்த தேங்காய். குழம்பு வைக்கும் போது சிறிதளவு தேங்காய் பால் ஊற்றி இறக்கினால் குழம்பின் சுவை அலாதியாக இருக்கும். அது மட்டுமல்லாமல் எந்தவிதமான பொரியல் செய்யும் பொழுதும் இறுதியாக தேங்காய் பூ தூவி சாப்பிட்டால் அந்த பொரியலின் சுவை கூடும். உணவு மட்டுமல்லாமல் சரும பராமரிப்பு மற்றும் தலைமுடி பராமரிப்புக்கும் தேங்காய் உதவுகிறது. ஆனால் தேங்காயின் ஒவ்வொரு பகுதியையுமே நாம் பயனுள்ள விதமாக மாற்றலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. 

இதையும் படிக்கலாமே: மச்சம் கூட புற்றுநோயா மாறுமா… அத எப்படி கண்டுபிடிக்கிறது…???

தேங்காயில் உள்ள வலிமையான லாரிக் அமிலம் மூளை செயல்பாட்டை தூண்டி, ஒரு அற்புதமான வரம் போல அமைகிறது. ஆரோக்கியமான தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயை போல சிறந்த ஒன்று இருக்க முடியுமா? அதே போல நமது உடலுக்கு இயற்கையான எலக்ட்ரோலைட் போல செயல்படுவது இளநீர். தேங்காயின் நன்மைகளை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். தேங்காய் என்பது உண்மையாகவே இயற்கை நமக்கு கொடுத்த வரம். சமஸ்கிருதத்தில் தேங்காய் ஸ்ரீபால் (Shreephal) என்று அழைக்கப்படுகிறது. இதற்கான அர்த்தம் ‘கடவுளின் பழம்’. இதற்கு கட்டாயமாக ஒரு காரணம் இருக்க வேண்டும். 

தேங்காயில் உள்ள மென்மையான சதை பகுதி மலாய் என்று அழைக்கப்படுகிறது. இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இதனை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆக அப்படியே சாப்பிடலாம் அல்லது மில்க்ஷேக், இனிப்பு வகைகளில் சேர்த்து சாப்பிடலாம். இளநீர் பற்றி பேசும் பொழுது நமக்கு உடனடி புத்துணர்ச்சி அளிக்கும் அதே நேரத்தில் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. 

தேங்காயின் வெளிப்புறத்தில் இருக்கும் அந்த கடுமையான கொட்டாங்குச்சியை கிண்ணம், பாத்திரம் அல்லது பிற அலங்கார பொருட்களாக மாற்றலாம். அதேபோல தேங்காய் நார் பிரஷ்கள், டோர் மேட் போன்றவற்றை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?