பித்தப்பை கற்களுக்கு இயற்கை தீர்வு இருக்கா… நம்பிக்கை தரும் ஆயுர்வேதம்!!!

Author: Hemalatha Ramkumar
11 October 2024, 6:48 pm

சிறுநீரக கற்கள் போலவே பித்தப்பை கற்களும் வலி மிகுந்தவை. இது நம்முடைய அன்றாட வேலைகளை மோசமாக பாதிக்கிறது. பெரும்பாலான நேரங்களில் இதற்கான தீர்வு என்பது அதிக செலவில் செய்யப்படும் அறுவை சிகிச்சையாக உள்ளது. எனினும் இந்த மோசமான உடல்நல பிரச்சனைக்கு ஆயுர்வேதம் ஒரு சில தீர்வுகளை அளிக்கிறது. உணவு மற்றும் ஊட்டச்சத்து மூலமாக பித்தப்பை கற்களை அகற்றலாம் என்று ஆயுர்வேத நிபுணர்கள் நம்புகின்றனர். பித்தப்பை கற்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்காத வரை அதனை உணவு மற்றும் சரியான ஊட்டச்சத்து மூலமாக சரி செய்யலாம். மேலும் நோயாளிக்கு எந்த விதமான வளர்சிதை கோளாறுகளும் இருக்கக் கூடாது. 

தொடர்ச்சியான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாக அறுவை சிகிச்சை செய்வதற்கான தேவையை தாமதமாக்கலாம். பித்தப்பை கற்களை அகற்றுவதற்கு உணவு சார்ந்த தலையீடுகள் அவசியம் என்றாலும் அதனுடன் சேர்ந்து உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவையும் முக்கியமான தீர்வுகளாக அமைகின்றன. மேலும் ஒரு சில உணவுகள் பித்தப்பை கற்களை அகற்றுவதற்கு மிகவும் உதவுகிறது. 

ஆப்பிள் சைடர் வினிகர் என்பது நமது உடலை சுத்தம் செய்வதற்காக சாப்பிடப்படும் உணவுகளில் முக்கியமான ஒன்றாக அமைகிறது. பித்தப்பை கற்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணமாக அமைவது ஹைப்போகுளோரோஹைடீரியா. ஆப்பிள் சைடர் வினிகர் இந்த அமில அளவுகளை மறைமுகமாக கட்டுப்படுத்தி பிரச்சனையை சரி செய்கிறது. 

பித்தப்பை கற்களை மென்மையாக்கி உடலில் இருந்து அகற்றுவதற்கு நீங்கள் ஆப்பிள் ஜூஸ் பருகலாம். 4 முதல் 5 நாட்களுக்கு தினமும் ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூஸ் குடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. 

ஆர்டிசோக் (கூனைப்பூ) என்பது நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் உருவாகாமல் பார்த்து கொள்ளவும் செய்கிறது. அதே நேரத்தில் கொலஸ்ட்ரால் வகை பித்த கற்களை கரைக்கவும் உதவும் ஒரு முக்கியமான சூப்பர் ஃபுட். இந்த சப்ளிமெண்டை 12 வாரங்களுக்கு சாப்பிட பரிந்துரை செய்யப்படுகிறது. 

பித்தப்பை கற்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் ஆப்பிள் ஜூஸ், காய்கறி ஜூஸ் போன்றவற்றை நாள் முழுவதும் சாப்பிட வேண்டும். மேலும் மாலை நேரங்களில் எலுமிச்சை ஜூஸோடு சேர்த்து ஆலிவ் எண்ணெய் பருக வேண்டும். எனினும் டயாபடீஸ் மற்றும் பிற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த அணுகுமுறையை பின்பற்றுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை கட்டாயமாக பெற வேண்டும். 

கத கதப்பான துணியை விளக்கெண்ணையில் முக்கி அதனை உங்கள் அடிவயிற்றில் வையுங்கள். இந்த பேக் உங்களுக்கு வலியிலிருந்து நிவாரணம் அளித்து, பித்தப்பை கற்களுக்கு சிகிச்சை அளிக்கிறது. 

இதையும் படிக்கலாமே: தேங்காய கடவுளின் பழம்னு சும்மாவா சொன்னாங்க…!!!

அன்னாசிப்பழம் பித்தப்பை கற்களை அகற்றுவதற்கு உதவுமா? 

அன்னாசி பழம் உண்மையில் உறுப்புகளில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை குறைக்கிறது. இது வலி மற்றும் எரிச்சலை ஆற்றுகிறது. அன்னாசி பழம் வீக்கத்தை குறைப்பதால் அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கான காலத்தை தாமதமாக்குகிறது. எனினும் டயாபடீஸ் மற்றும் அதிக பொட்டாசியம் அளவுகள் இருப்பவர்கள் இதனை முயற்சி செய்வதற்கு முன்பு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இது தவிர பித்தப்பை கற்களால் அவதிப்படுபவர்கள் பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி மற்றும் ஒரு சில யோகா ஆசனங்களை தினமும் செய்வது அவசியம். 

ஊட்டச்சத்தை நம்பி இருக்காமல் எப்பொழுது ஒருவர் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்? 

அடிவயிற்றில் கடுமையான வலி, கருப்பு நிற மலம், தோல் மஞ்சள் நிறமாக மாறுதல் மற்றும் சோதனை மூலம் பித்தப்பையில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருப்பது உடனடியாக நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 125

    0

    0