இறந்த மகனின் விந்தணுக்களை பயன்படுத்த அனுமதி.. டெல்லி நீதிமன்றம் விநோத தீர்ப்பு!

Author: Hariharasudhan
12 October 2024, 4:08 pm

உயிரிழந்த மகனின் விந்தணுக்களைப் பயன்படுத்தி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற பெற்றோருக்கு அனுமதி அளித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த ஒரு 60 வயது மதிக்கத்தக்க தம்பதியின் மகன் ப்ரீத் இந்தர் சிங். 30 வயதான இவர், கடந்த 2020ஆம் ஆண்டு Non-Hodgking’s Lymphoma என்ற நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, அவரது இனப்பெருக்க காலம் கருதி, அவரது விந்தணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அவரது மகன் அதே ஆண்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பின்னர், தனது மகனின் சேமிக்கப்பட்ட விந்தணுக்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் பெற்றோர் கேட்டுள்ளனர். அதற்கு தர முடியாது என மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. எனவே, இது தொடர்பாக அவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Delhi High Court

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இறந்த ஒருவரின் விந்தணுக்களைப் பயன்படுத்துவது குறித்து எந்தவொரு சட்ட விதிகளும் அரசியல் சாசனத்தில் இடம் பெறவில்லை எனக் கூறிய நீதிபதி பிரதிபா சிங், 2002ஆம் ஆண்டு இஸ்ரேலிய வழக்கில் வாடகைத்தாய் மூலம் இறந்த மகனின் விந்தணுக்களைப் பயன்படுத்தி குழந்தை பெறுவதற்கு அனுமதி அளித்ததை சுட்டிக் காட்டினார்.

எனவே, இறந்த மகனின் விந்தணுக்களைப் பயன்படுத்த அவரது பெற்றோருக்கு அனுமதி அளித்த நீதிமன்றம், பதப்படுத்தப்பட்ட விந்தணுக்களை முறைப்படி பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது. இந்த தீர்ப்பு தற்போது இந்திய அரசியல் சாசன வரலாற்றில் முக்கிய, புதுமையான தீர்ப்பாக அமைந்துள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 214

    0

    0