அழகழகான பூக்களை வைத்தே டயாபடீஸ் பிரச்சினையை கட்டுப்படுத்தலாம்னு சொன்னா நம்புவீங்களா…???

Author: Hemalatha Ramkumar
12 October 2024, 4:09 pm

டயாபடீஸ் வந்துவிட்டாலே அதனுடன் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளும் வந்து விடுகிறது. குறிப்பாக உணவு மற்றும் வாழ்க்கை முறையில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கிறது. ஏனெனில் இந்த நோயானது நமது உடலில் உள்ள இதயம், சிறுநீரகம், மூளை, கண்கள் மற்றும் தோல் உட்பட பல உறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கக்கூடும். ஆனால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக ஏற்படும் இந்த டயாபட்டிஸை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் இந்த மாதிரியான பிரச்சனைகளில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். ஃப்ரீ டயபடீஸ் மற்றும் ஏற்கனவே டயாபடீஸ் பிரச்சனை இருப்பவர்கள் நோயைத் தவிர்ப்பதற்கும் அல்லது அது மேலும் மோசமடையாமல் பாதுகாப்பதற்கும் ஒரு சில இயற்கை தீர்வுகள் உள்ளன. இயற்கை தீர்வுகளை பற்றி பேசும்போது, குறிப்பிட்ட சில தாவரங்களின் பூக்களில் காணப்படும் ஆன்டி டயாபட்டிக் பண்புகள் ரத்த சர்க்கரை அளவுகளை அதிகரிக்க விடாமல் பார்த்துக் கொள்கிறது. அந்த வகையில் டயாபடீஸை கட்டுக்குள் வைத்து ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்குவதற்கு உதவும் சில பூக்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

டாலியா பூ

டாலியா பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இதில் சிறந்த மருத்துவ பண்புகள் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக டயாபடீஸ் நோயாளிகளுக்கு தேவையான பண்புகள் இதில் அதிகமாக உள்ளது. இந்த பூக்களின் இதழ்களில் உள்ள மூன்று முக்கியமான மூலக்கூறுகள் டயாபடீஸை கட்டுப்படுத்தும். டாலியா பூவானது மூளையில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, ப்ரீ டயாபட்டிஸ் மற்றும் வகை 2 டயாபடீஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் ரத்த சர்க்கரை அளவுகளை சீராக மாற்றுவதற்கு உதவுகிறது. 

நித்திய கல்யாணி 

வீட்டிற்கு வெளியே அழகுக்காக வைக்கப்படும் இந்த நித்திய கல்யாணி செடியின் பூக்கள் ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்க உதவும். எனினும் பிற டயாபடீஸ் மருந்துகளோடு இதனை சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இந்த பூக்கள் ரத்த சர்க்கரை அளவை மிக மோசமாக குறைத்து விடும். டயாபடீஸ் தவிர நித்திய கல்யாணி பூக்களானது புற்றுநோய், தொண்டை புண், இருமல் பூச்சிக்கடி மற்றும் பிற உடல் நல கோளாறுகளுக்கும் தீர்வு தருகிறது. 

வாழைப்பூ 

டயாபடீஸ் இருப்பவர்கள் வாழைப் பழங்கள் சாப்பிடக்கூடாது என்று சொன்னாலும் வாழைப்பூவில் ஆன்டி டயாபட்டிக் பண்புகள் இருக்கிறது. நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் நீரழிவு நோய் அறிகுறிகளை குறைப்பதில் வாழைப்பூ சிறந்த விளைவுகளை அளித்துள்ளது. வாழைப்பூவில் குறைந்த கிளைசிமிக் எண் இருப்பதோடு இதில் அதிக உணவு நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் காணப்படுகிறது. 

இதையும் வாசிக்கலாமே: இத மட்டும் தெரிஞ்சுகிட்டா போதும்… வீட்லயே ஈசியா ஃபேஸ் ஷீட் மாஸ்க் ரெடி பண்ணிடலாம்!!!

செம்பருத்தி பூ 

இந்த அழகான சிவப்பு நிற பூக்கள் ரத்த சர்க்கரை அளவுகளை குறைப்பதற்கு பெயர் போனது. செம்பருத்தி பூ தேநீரை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த குளுக்கோஸ் அளவுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறையும். 

சங்குப்பூ 

சங்குப்பூ வைத்து செய்யப்படும் தேநீர் டயாபடீஸ் உணவுக்கு ஒரு அற்புதமான கூடுதலாக அமைகிறது. அழகான நீல நிற இதழ்கள் கொண்ட இந்த பூக்கள் ரத்த சர்க்கரையை குறைக்கிறது. ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்காமல் இருக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் இந்த தேநீரை நீங்கள் பருகலாம். மேலும் இது இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து, குளுக்கோஸ் மெட்டபாலிசத்தையும் ஊக்குவிக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 135

    0

    0