இளம் ஹீரோவாக வளர்ந்து கொண்டு இருந்த ஜெயம் ரவி ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் டாப் நடிகராகவும் இடத்தை தக்கவைத்துக் கொண்டார் ஜெயம் ரவி.
இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவிக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மகன்கள் பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து ஜெயம்ரவி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
குடும்பம் குழந்தைகள் என பிசியாக இருந்து கொண்டே திரைப்படங்களிலும் அதிக ஆர்வத்தை செலுத்தி நடித்த வந்தார். இதனுடையே திடீரென மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் ஜெயம் ரவி. அந்த அறிவிப்பு வெளியானதும் எல்லோருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும் நடிகை ஆர்த்தி இது குறித்து பேசும்போது எனக்கு விருப்பமே இல்லை எங்களிடம் கலந்து யோசிக்காமல் அவரது தனிப்பட்ட முடிவாக விவாகரத்தை அறிவித்திருக்கிறார் எனக் கூறி அதிர்ச்சி அளித்தார்.
அதை எடுத்து ஜெயம் ரவி என்னை ஆர்த்தி டார்ச்சர் செய்தார்…. மாமியார் பண விஷயத்தில் .என்னை ஏமாற்றினார் எனக்கென தனி வங்கி கணக்கு கூட இல்லை. நான் பத்து ரூபாய் செலவு செய்தால் கூட ஆர்த்தி கணக்கு கேட்பார் . மேலும் என்னுடைய அசிஸ்டன்ட் இடம் போன் பண்ணி யார் கூட இருக்கிறேன்? எங்க இருக்கிறேன்? என்ன செலவு செய்தார்? என கேள்வி கேட்டது எனக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. இதெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை இதனால் தான் விவாகரத்து என கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்: ஹர்திக் பாண்டியாவுடன் விவாகரத்து…. யூடியூபருடன் ஊர் சுற்றும் நடிகை நடாஷா – வீடியோ!
இவர்களின் இந்த விவாகரத்து விவகாரம் இப்படி நாளுக்கு நாள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் நிலையில் நடிகர் ஜெயம் ரவி தற்போது விவாகரத்துக்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனது சமூக வலைத்தளங்களில் ஹேண்ட்ஸமாக மிகவும் ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். பிரதர் படத்தின் ப்ரோமோஷனுக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் எனக் கூறி அவர் கேப்ஷனில் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு பெண்கள் கூட்டம் லைக்ஸ் குவித்து அவரை வர்ணித்து அவரது அழகில் மூழ்கி கமெண்ட் செய்து வருகிறார்கள்.