விவாதிக்க தயாரா? துணை முதல்வர் உதயநிதிக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2024, 7:53 pm

விவாதிக்க தயாரா என துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா சவால் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதி பா.ஜ.க சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் மருத்துவ் முகாம், நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் பா.ஜ.க.வில் சேர்ந்த உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பின்ர் அட்டைகளை மானில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா வழங்கினார்.

பின்னர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருச்சியில் சார்ஜாவிற்கு சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதும் மக்களை பாதிப்பு இல்லாமல் பத்திரமாக தரையிறக்கிய விமானியை பாராட்டுகிறேன். உதயனிதி ஸ்டாலின் இப்போது துணை முதல்வராகி உள்ளார். 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை எவ்வளவு ரெயில் விபத்துகள் நடத்து உள்ளன. தற்போது எவ்வளவு விபத்துகள் என்பதை விவாதிக்க தயாராக உள்ளோம்.

கவரப்பேட்டை ரெயில் விபத்தில் சதி திட்டம் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. சில குழுக்கள் மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தண்டவாளத்தில் கட்டையை போட்டு விட்டு உள்ளனர். ரெயில் டிரைவரின் நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது.

துணை முதல்வராகிட்டும் என்னவெல்லாம் பேசலாம் என்று பேசக்கூடாது. விமான படை சாகச நிகழ்ச்சி உத்தரபிரதேசத்தில் நடந்த போது எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் சென்னையில் 5 பேர் பலியாகி உள்ளனர். உதயனிதி துணை முதல்வரான பின் நடந்த முதல் சம்பவம். மக்களுக்கு குடிக்க தண்ணீர் கூட ஏற்பாடு செய்ய முடியாத அரசு என்று நிருபணம் ஆகி உள்ளது. அதிகம் பேச வேண்டாம் என்று உதயநிதிக்கு தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!