விஷப்பூச்சியே அவருதான்.. செந்தில் பாலாஜி சிறைக்கு செல்ல காரணம் அண்ணாமலை இல்ல..வெளியான வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan14 October 2024, 12:57 pm
செந்தில் பாலாஜி சிறைக்கு போக, நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் NIA சோதனை நடத்த காரணம் அண்ணாமலை அல்ல என வீடியோ வெளியாகியுள்ளது
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா சிவா அண்மைக் காலமாக அண்ணாமலைக்கு எதிரான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின், பல உண்மைகளை உடைத்துள்ளார்.
சமீப கலாமாக யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து வரும் திருச்சி சூர்யா, தற்போது சவுக்கு சங்கர் குறித்து பேசிய வீடியோவை அவரே தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டுக்கு NIA ரெய்டு போனதுக்கு காரணம் அண்ணாமலை அல்ல, ஆனால் எல்லோரும் அவர்தான் காரணம் என நினைத்திருக்கிறோம்
விஷப் பூச்சியை புள்ள பூச்சியாகவும் புள்ள பூச்சியை
— Tiruchi Suriyaa (@TiruchiSuriyaa) October 13, 2024
விஷ பூச்சியாகவும்
நினைத்த சமூகம்! pic.twitter.com/puM9K2pg6B
செந்தில் பாலாஜி சிறையில் போனதுக்கு காரணம் அண்ணாமலை அல்ல, எல்லாத்துக்கும் காரணம் அண்ணாமலை என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டீர்கள், ஆனால் அது உண்மையல்ல.
சமீபத்தில், மணல் குவாரியில் அமலாக்கத்துறை ரெய்டுக்கு போனதற்கு காரணம் அண்ணாமலை அல்ல, சவுக்கு சங்கர் தான் என போட்டுடைத்துள்ளார. மேலும் விஷப் பூச்சியை புள்ள பூச்சியாகவும் புள்ள பூச்சியை விஷ பூச்சியாகவும் நினைத்த சமூகம் என அந்த வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.