பாவிங்க… 55 நாள் நைட்டு பகலா என்ன வச்சு செஞ்சாங்க…. நடிகை பிரியா பவானி ஷங்கர் வேதனை!

Author:
14 October 2024, 5:18 pm

மீடியா உலகில் செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமாகி அதன் பிறகு சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் தான் ப்ரியா பவானி சங்கர். அதன் மூலம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

இது அடுத்து கடைசியாக பிரியா பவானிசங்கர் நடிப்பில் வெளிவந்திருக்கும் டிமான்டி காலனி 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படத்திற்கு. பாராட்டுகள் குவிந்து வருகிறது.

priya bhavani shankar - updatenewse360

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு படத்தில் நடித்த மோசமான அனுபவத்தை குறித்து மனம் திறந்து பேசி இருந்தார். ஒரு பெரிய ஹீரோவோட படத்துல நான் நடிச்சேன். அதை இப்ப நெனச்சா எனக்கு சிரிப்பு தான் வருது. கிட்டத்தட்ட 55 நாள் வெயில் மழைன்னு பாக்காமல் ஷூட் பண்ணி முடிச்சிட்டு டப்பிங்ல போய் பார்த்தா ஒண்ணுமே இல்லை.

அதை பார்த்து எனக்கு ரொம்ப ஷாக் ஆயிடுச்சு. என்கிட்ட நீங்க சொன்ன கதை என்ன? இங்க எடுத்து வச்சிருக்கிறது என்ன? அப்படின்னு பயங்கரமா ஷாக் ஆயிட்டேன். என்ன வச்சி அவ்ளோ ஷூட் பண்ணாங்க அந்த காட்சிகள் எல்லாம் எங்க என்று கேட்டதற்கு அதெல்லாம் மியூசிக்ல வரும் அப்படின்னு சொன்னாங்க. கேட்டதும் எனக்கு பக்குனு ஆகிடுச்சு.

priya bhavani shankar

ஒரு படத்தோட கதையை படிக்கிறது கேட்கிறது எல்லாமே ஸ்க்ரீனுக்கு வந்துடும் அப்படின்னு சொல்ல முடியாது. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்லயே அதை ஓரளவுக்கு ரியலைஸ் பண்ண ஆரம்பிச்சிடலாம். இருந்தாலும் என்னால் ஏத்துக்குவே முடியல. அப்படி இருந்தும் நான் கேட்டபோது அதெல்லாம் மியூசிக்கில் வரும் அப்படின்னு சொன்னாங்க பாரு….அங்க தான் கடுப்பாச்சு.

priya bhavani shankar - updatenewse360

இதையும் படியுங்கள்: மஞ்சள் வீரன் மெண்டல் வீரன் ஆன தருணம்…. பூஜையிலே இம்புட்டு அளப்பறையா?

நான் ஹீரோவுக்கு போன் பண்ணி அவர்கிட்ட கேட்டேன் …. 125 நாள் சூட் பண்ண என்னோட காட்சிகளே இல்ல நானே அமைதியா தான் இருக்கேன் என்று பதில் அளித்தார். அத நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு அதே நேரத்துல சிரிப்பாவும் இருக்கு என பிரியா பவானி சங்கர் மிகுந்த வேதனையோடு தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…