இந்த சின்ன விஷயத்த ஃபாலோ பண்ணாலே நீங்க சமைக்குற சாப்பாட்டோட டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்!!! 

Author: Hemalatha Ramkumar
14 அக்டோபர் 2024, 6:59 மணி
Quick Share

சமையல் என்பது ஒரு கலை. அதனை ரசித்து செய்யும் பொழுது நிச்சயமாக அதன் சுவை வேற லெவலாக இருக்கும். எனினும் சமைக்கும் போது நாம் பின்பற்ற வேண்டிய சிறு சிறு விஷயங்களும் உள்ளன. நாம் அப்படி செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயமுமே நம்முடைய உணவின் சுவையை மாற்றி அமைக்கக்கூடும். அந்த வகையில் நீங்கள் வெங்காயம் வெட்டும் விதம் கூட உணவின் சுவையை மாற்றுவதில் பங்கு கொண்டுள்ளது. 

வெங்காயத்தின் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் அதன் சுவையை குறிக்கிறது. வெங்காயத்தின் வாசனை என்பது அதனை நீங்கள் வெட்டுவதற்கு முன்பு மிக லேசானதாக இருக்கும். வெங்காயத்தை நீங்கள் எப்படி வெட்டுகிறீர்கள் என்பதன் அடிப்படையிலேயே அதன் மூலமாக கிடைக்கும் ஃப்ளேவர் அமையும். வாசனை மற்றும் ஃப்ளேவர் என்பது வெங்காயத்தில் உள்ள அலினேஸ் என்ற என்சைம் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகிய இரண்டுக்கும் இடையே ஏற்படும் ரியாக்ஷனின் விளைவாக கிடைக்கிறது. 

அலினேஸ் என்சைம் மற்றும் அமினோ அமிலம் வெங்காயத்தின் தனித்தனி பகுதிகளில் இருப்பதால் இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே வெங்காயத்தின் மூலமாக நமக்கு வாசனையும் ஃப்ளேவரும் கிடைக்கும். எனவே வெங்காயத்தை நீங்கள் நீல வாக்கில் வெட்டுவதை விட குறுக்காக வெட்டும்போது அதிக செல் சுவர்கள் பிளவுபடும். 

இதையும் படிக்கலாமே: சாதம் மீந்து போனாலும் இனி கவலையே இல்ல… பத்தே நிமிஷத்துல அது காலியாகுற மாதிரி கிரிஸ்பி போண்டா ரெசிபி இதோ!!!

இதனால் நாம் எதிர்பார்த்தபடி அலினேஸ் என்சைம் மற்றும் அமினோ அமிலம் இடையே ரியாக்ஷன் நடைபெற்று வெங்காயத்தில் இருக்கும் வாசனை மற்றும் ஃபிளேவர் உணவில் சேரும். சாலட் போன்றவற்றிற்கு வெங்காயத்தை நீளவாக்கில் வெட்ட வேண்டும். ஏனெனில் குறுக்கு வட்டத்தில் நீங்கள் வெட்டும் பொழுது அது அதிக ஃப்ளேவரை கொடுக்கும். அது சாலட்டை கெடுத்து விடும். 

இதுவே அடுப்பில் வைத்து நீங்கள் சமைக்கும் உணவுகளுக்கு வெங்காயத்தை குறுக்கு வாட்டத்தில் வெட்ட வேண்டும். அதன் மூலமாக வெங்காயம் நன்கு வதங்கி ஆழமான ஃப்ளேவர் கிடைக்கும். எனவே நீங்கள் வெங்காயத்தை எப்படி வெட்டுகிறீர்கள் மற்றும் அதனை எந்த அளவுக்கு சமைக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். கூடுதலாக வெங்காயத்தை வதக்கும் போது அதில் தண்ணீர் தெளித்து வதக்குவது அதன் சுவையை இன்னும் அதிகமாக்கும். அடுத்த முறை சமைக்கும் போது இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள், நிச்சயமாக உணவின் சுவையில் மாற்றம் தெரியும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 89

    0

    0

    மறுமொழி இடவும்