பிஞ்சுக் குழந்தைனு கூட பார்க்கலையே.. +2 மாணவி உட்பட 2 பேர் கொலை.. தலைமறைவான சித்தப்பா!
Author: Udayachandran RadhaKrishnan15 October 2024, 11:10 am
சேலம் அருகே +2 மாணவி மற்றும் அவரது தம்பியை கொடூரமாக கொலை செய்து தலைமறைவான சித்தப்பாவை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் தும்பல் பட்டி பஞ்சாயத்து ஒடுவன் காடு பகுதியில் ராஜா என்பவரின் குழந்தைகள் பள்ளியில் பயிலும் அண்ணன் தங்கை இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: சித்தப்பாவை கழுத்தை நெறித்துக்கொன்ற அண்ணன் மகன்…!! மதுபோதையில் உளறியதால் வெளியான திடுக்கிடும் தகவல்…!
தனது சொந்த சித்தப்பா தனசேகரன் என்பவர் இந்த கொலையை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வந்துள்ளது.
தனசேகனுக்கும் ராஜாவுக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று மாலை வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதால் தனசேகரன் ராஜாவை பலமாக தாக்கியுள்ளார்.
அப்போது தடுக்க வந்த ராஜாவின் இரண்டு குழந்தைகளையும் தனசேகரன் என்பவர் கொடூரமாக கழுத்தை அறுத்தும் வெட்டியும் படுகொலை செய்துள்ளார் .
மனதை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக பனமரத்துப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த காயமடைந்த ராஜாவும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தப்பி ஓடிய கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர் சொத்துக்காக பிஞ்சு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது