பொளந்து கட்டுறாங்களே…. ஹீரோ ரேஞ்சுக்கு ஸ்டண்ட் காட்சியில் அசத்தும் கேப்ரியெல்லா!

Author:
15 October 2024, 12:04 pm

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கேப்ரியெல்லா சார்ல்டன். இவர் 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் சுமி என்ற கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து இருந்தார். அதில் கேப்ரில்லா நடிகர் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார் .

அவரது ரோல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலிருந்து கவனத்தையும் ஈர்த்தார். அவர் நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு முதலிடத்தையும் பெற்றிருக்கிறார்.

Gabriella Charlton -updatenews360

தொடர்ந்து தமிழ் சினிமாவில் சென்னையில் ஒரு நாள் அப்பா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிகை கேபிரில்லா சால்டன் நடித்திருக்கிறார். இதனிடையே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்: ஒரே அசிங்கமா போச்சு குமாரே…. பாவாடை சிக்கி விழுந்த சன்னி லியோன்… வீடியோ!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஈரமான ரோஜாவே தொடரில் நடிகை கேப்ரியெல்லா நடித்தார். இதன் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து சீரியல்களில் நடித்துவரும் கேபிரில்லாவுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகி விட்டார்கள்.

Gabriella Charlton -updatenews360

இந்நிலையில் சீரியல் சண்டை காட்சி ஒன்றுக்காக கேபிரில்லா வில்லன்களுடன் அசத்தலாக சண்டை போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி எல்லோரையும் ஆர்ச்சர்யப்படுத்தியுள்ளது. இதில் ஹீரோ ரேஞ்சுக்கு. பறந்து பறந்து அடிக்கிறார் கேப்ரில்லா. இதை பார்த்து நெட்டிசன்ஸ் கராத்தே பழகி இருப்பாங்களோ இவ்வளவு சிறப்பா சண்டை காட்சியில் நடித்திருக்கிறார்கள் என கேபிரில்லாவின் இந்த நடிப்பை புகழ்ந்து பாராட்டி தள்ளியுள்ளனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 271

    0

    0