90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை குஷ்பூ. 80க்களில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கை ஆரம்பித்து அதன் பிறகு 1989ம் ஆண்டு வருஷம் 16 என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பிறகு 90களில் தமிழ் திரைப்படத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருந்தார். அவர் தமிழை தாண்டி கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய மொழி நடிகையாக பார்க்கப்பட்டார்.
இதனிடையே நடிகர் பிரபுவை காதலித்து வந்தார். ரகசியமாக இருக்க அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக கூட கூறப்பட்டது. ஆனால், சிவாஜி கணேசன் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அந்த காதல் முறிந்து போனது. அதன் பிறகு குஷ்பூ சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தற்போதும் திரைப்படங்களில் சிறந்த கதாபாத்திரம் குணசித்திர கதாபாத்திரம் என எது கிடைத்தாலும் அதில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதனிடையே அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். விஜயுடன் வாரிசு திரைப்படத்தில் நடிகை குஷ்பூ நடித்திருந்தார் .
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை குஷ்பூ சமீபத்தில் பிரியாணி செய்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் பாய் வீட்டு ஸ்டைலில் பிரியாணி வர வேண்டுமென்றால் அந்த ஃபிளேவர் எப்படி எப்படி செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன் என கூறுகிறார்.
இதையும் படியுங்கள்: பொளந்து கட்டுறாங்களே…. ஹீரோ ரேஞ்சுக்கு ஸ்டண்ட் காட்சியில் அசத்தும் கேப்ரியெல்லா!
ஒரு கருப்பு கரி துண்டை எடுத்து அடுப்பில் நன்றாக சூடாகி விட்டு அதை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக வெந்த பிரியாணி குக்கரில் அதை வைத்துவிட்டு அந்த கறித்துண்டை ஒரு கிண்ணத்தில் போட்டு சுடச்சுட எடுத்து வைத்து அதன் மேல் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி அதன் சூடு ஆவியோடு அந்த பிரியாணி மண மணக்கும் இது தான் பாய் வீட்டு பிரியாணியின் ரகசியம் என குஷ்பு ரகசியத்தை பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்து பலரும் ட்ரை பண்ணிட்டா போச்சு என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:
அட இது தான் பாய் வீட்டு பிரியாணி சீக்ரெட்டா – குஷ்பூ கொடுத்த சூப்பர் டிப்ஸ்#Kushboo #Behindtalkies pic.twitter.com/kfgC4Jgxso
— Behind Talkies (@BehindTalkies) October 14, 2024