அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பு.. விசாரணையில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2024, 8:21 pm

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஒசூர் நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமங்களில் ரகசியமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து நல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி, ஆவலப்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்

அப்போது கெலவரப்பள்ளி கிராமத்திற்கு அருகே மிளகாய் தோட்டத்தை ஒட்டிய அரசு புறம்போக்கு நிலத்தில் புற்கள், புதர்கள் வளர்ந்த பகுதியில் ரகசியமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் அங்கு வளர்க்கப்பட்ட 5 கஞ்சா செடிகளை பிடுங்கி அகற்றினர். போலீசாரின் விசாரணையில் கெலவரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் (48) என்பவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா செடிகளை உரமிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது

அதனைதொடர்ந்து முனிராஜை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

  • Vetrimaaran Viduthalai controversy A சான்றிதழ் கொடுத்தும் வசனங்கள் MUTE ஏன்? சரமாரியாக கேள்வி கேட்ட பிரபலம்…!
  • Views: - 581

    0

    0