ஆந்திரா, பெங்களூரில் துவங்கிய கனமழை.. சென்னைக்கு ரெயின் ஸ்டாப் எப்போது?

Author: Hariharasudhan
16 October 2024, 11:30 am

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர கடற்கரையோர பகுதிக்கு நகர்ந்து வருவதால், ஆந்திரா மற்றும் பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், வேளச்சேரி, வியாசர்பாடி, பட்டாளம் ஆகிய இடங்களில் தெருக்களில் தண்ணீர் சூழ்ந்தது.

இதனால் வெள்ளநீரில் சிக்கிய பொதுமக்கள் பாதுகாப்பாக பைபர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள் தயார் நிலையில் இருந்த நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அது மட்டுமல்லாமல், அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவுப் பொட்டலங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றனர்.

STORM

இன்று காலை முதல் சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழை அளவு குறைந்து காணப்படுகிறது. அதேநேரம், பல்வேறு இடங்களில் வெள்ளநீர் வடிந்து காணப்படுகிறது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்வதால் இன்று சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: காரை வீட்டுக்கு எடுக்கலாம்… சென்னை மக்களுக்கு இனிப்பான நியூஸ்!

இந்த நிலையில், பெங்களூரு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனிடையே, நெல்லூர் மற்றும் புதுச்சேரி இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Sobhita and NAga chaitanya not interested in Marriage திருமணத்தில் நாகசைதன்யா – சோபிதாவுக்கு விருப்பமில்லை.. பரபரப்பை கிளப்பிய நாகர்ஜூனா!
  • Views: - 180

    0

    0