சாம்பார் வடையில் பூரான்… அலட்சியமாக பேசிய கடை உரிமையாளர் : பதறிய பெற்றோர்!
Author: Udayachandran RadhaKrishnan16 October 2024, 3:42 pm
தேநீர் கடையில் வாங்கிய வடையில் பூரான் இருந்ததால் கேள்வி கேட்ட வாடிக்கையாளரிடம் அலட்சியமாக பதில் சொன்னதால் ரெய்டு வந்த அதிகாரிகள்
திண்டுக்கல் என் ஜி ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் பியூலா. இவர் தனது உறவினர் அஸ்வதி மற்றும் தனது மகனை அழைத்துக் கொண்டு NGO காலனி மெயின் ரோட்டில் உள்ள ஜம்ஜம் தேநீர் கடையில் வடை கேட்டுள்ளனர்.
கடையில் பணி செய்பவர்கள் வடையில் குருமா ஊற்றி கொடுத்துள்ளனர் தனது மகனுக்கு வாங்கிய வடையை ஊட்டியுள்ளார் அப்போது வடையில் பூரான் இருந்ததைப் பார்த்த பியூலா மற்றும் அஸ்வதி இருவரும் கடை உரிமையாளரிடம் வடையில் பூரான் இருந்தது பற்றி கேட்டுள்ளனர்.
அப்போது கடை உரிமையாளர் இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரக்குறைவாக பேசியுள்ளார். உங்கள் வீட்டில் பூரான் இல்லையா என பேசியுள்ளார்.
இதையடுத்து பியூலா தனது மகனுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என பயத்தில் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகனை சேர்த்துள்ளார் மேலும் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் கூறியுள்ளார்
இதை எடுத்து திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செல்வம் தலைமையிலான அதிகாரிகள் குழு ஜம்ஜம் பேக்கரிக்கு நேரில் சென்று வடைக்கு தயார் செய்யப்பட்ட மாவு மற்றும் அதன் குருமா உள்ளிட்டவைகளை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு மீதி இருந்ததை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்
திண்டுக்கல் நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் பொதுமக்கள் சாப்பிடும் உணவுகள் தரமாக உள்ளதா என அவ்வப்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
அப்படி ஆய்வு செய்தால் மட்டுமே உணவு தரமான உணவாக பொதுமக்களுக்கு கிடைக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0