கேவலமா பார்த்து சிரிக்கிறாங்க… கலங்கி அழுத ஜெஃப்ரி – வெளுத்து வாங்குவாரா விஜய் சேதுபதி?

Author:
16 October 2024, 4:35 pm

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தின் தலைவராக சத்தியா நியமிக்கப்பட்டு இருக்கிறார். நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து பிக் பாஸ் வீடு சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. முத்துக்குமரன் சாக்சனா ,தர்ஷா குப்தா, சௌந்தர்யா என 10 பேர் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள் .
இதனிடையே பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் போன்றில் போட்டியாளர்கள் தங்களை முதலிடத்தில் வைத்துக்கொள்ள சக போட்டியாளர்களிடம் வாக்கு கேட்கிறார்கள். இதில் முதல் நபராக முத்து தன்னுடைய நியாயத்தையும் கருத்தையும் கூற போட்டியாளர்கள் எந்த வித ரியாக்ஷனும் கொடுக்காமல் இருக்கிறார்கள்.

bigg boss promo

அதேபோல் ஜெஃப்ரி தனக்கு வாக்கு கேட்ட போது சக போட்டியாளர்கள் அவரை பார்த்து கேவலமாக சிரிக்கிறார்கள். இதை பார்த்ததும் ஜெப்ரி அங்கே அதை பற்றி எதுவும் பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை. நான் உங்களிடம் ஒட்டு கேட்கிறேன். நீங்கள் போடுவதும் போடாததும் உங்கள் விருப்பம் நீங்கள் போட்டால் தான் நான் வீட்டில் இருக்க முடியும் போடவில்லை என்றால் வெளியே இருக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது.

இதையும் படியுங்கள்: மொத்த பேர் கண்ணும் கீழ தான் இருக்கு… பாலிவுட் பட விழாவில் கிளாமர் குயினாக சமந்தா!

இஷ்டம் இருந்தால் போடுங்கள் என கூற பிறகு போட்டியாளர்கள் செய்ததை நினைத்து ஜெப்ரி தனியாக நினைத்து கலங்கி அழுகிறார். பிறகு விஷால் மட்டும் அவரிடம் சென்று ஜெனியூனாக மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்துகிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஜெப்ரியை இப்படி அசிங்கப்படுத்துவதால் அவர் இன்னும் பிரபலம் ஆகிறார். அவர் உண்மையிலேயே சிறப்பாக விளையாடுகிறார். இப்படி போனால் அவரது கேம் சிறப்பாக நாளுக்கு மாறும் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

  • Keerthy Suresh Bollywood debut கீர்த்தி சுரேஷுக்கு அடித்த ஜாக்பாட்…வாரி கொடுத்த அட்லீ…முதல் பாலிவுட்டில் இத்தனை கோடி சம்பளமா..!
  • Views: - 497

    0

    0