இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்க கனடா முடிவு : அமெரிக்கா ஆதரவு?

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2024, 4:43 pm

இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்க கனடா முடிவு செய்துள்ள நிலையில் அமெரிக்கா இதற்கு ஆதரவு தெரிவிப்பது போல கருத்து கூறியுள்ளது.

கனடாவில் சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் நிஜ்ஜார் கொலையான விவகாரம் விஸவரூபம் எடுத்துள்ளது.

இந்த கொலைக் குற்றத்துக்கும் இந்தியாவுக்கு தொடர்பு உண்டு என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டிய நிலையில், இந்தியா இதை மறுத்துள்ளது.

இந்த விவகாரம் இரு நாடுகளிடையே விரிசல் ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த கனடா முடிவு செய்துள்ளது.

இதனால் இந்திய தூதரை திரும்பப் பெற இந்தியா முடிவு செய்த நிலையில், டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.

அதே சமயம் கனடாவில் உள்ள 6 இந்திய தூதரக அதிகாரிகளை வெளியேற அந்நாட்டு அரசு உத்தரிவிட்டுள்ளது. இதனால் மோதல் போக்கு இருநாடுகளிக்கிடையே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசித்து வருவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.

இது குறித்து கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலியிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, எல்லாம் மேஜையில் உள்ளது என ஒரு வார்த்தையில் பதிலளித்துள்ளார். அப்படியென்றால் பொருளாதாரத் தடை விதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளதாகவே அர்த்தம்.

இந்த நிலையில் கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. நிஜ்ஜார் கொலையில் கனடா கூறிய குற்றச்சாட்டுகள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்திய அரசு இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 770

    0

    0