GOAT படம் ‘அந்த’ படத்தோட காப்பிதான்.. ஊரே காரித் துப்புச்சு.. வெங்கட்பிரபுவே சொல்லிட்டாரே!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2024, 11:59 am

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் அந்த படத்தோட காப்பிதான் என வெங்கட்பிரபு ஒப்புக்கொண்டுள்ளார்.

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கிய கோட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் வசூலை குவித்தது.

நடிகர் விஜய் தந்தை மகன் என இரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, ஜெய்ராம், மோகன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

படம் வெளியானது முதலே சமூக வலைதளங்களில் நெட்டிசன்க்ளின் விமர்சனத்துக்கு ஆளானது. இந்த படம் ஏற்கனவே விஜயகாந்த் நடித்த ராஜதுரை படத்ததோட அப்பட்டமான காப்பி என சொல்லப்பட்டது.

ஆனால் இது குறித்து படக்குழு எந்த பதிலையும் சொல்லாமல் வந்தனர். ராஜதுரை படத்தை விஜய்யின் அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் தான் இயக்கியிருந்தார். விஜயகாந்த் தந்தை மகனாகவும், ஜெயசுதா, சிவரஞ்சினி, ஆனந்த்ராஜ், சுந்தர்ராஜன் என பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இதையும் படியுங்க: வீடு திரும்பிய ரஜினி கவனமாக இருக்க வேண்டும் : மருத்துவர்கள் கூறிய அட்வைஸ்..!!

இந்த நிலையில் அண்மையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற வெங்கட்பிரபுவிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, ஆமாங்க கோட் படம் ராஜதுரை படத்தோட காப்பிதான். ஆனால் கோட் படத்தை எடுத்து ரிலீஸ செய்த பின்பு தான் எனக்கு இந்த விஷயமே தெரிந்தது.

சமூகவலைதளத்தில் இது ராஜதுரை படம் என விமர்சித்த போது, அந்த படத்தை முழுவதும் பார்த்து தான் தெரிந்துகொண்டேன். முன்பே இந்த படத்தை பார்த்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக படத்தை எடுத்திருப்பேன் என கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 221

    0

    0