சொந்த மண்ணில் இந்திய அணி மோசமான சாதனை.. 5 பேர் டக்அவுட்.. அசுர வேகத்தில் நியூசி..!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2024, 1:14 pm

சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்துள்ளது.

3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது நியூசிலாந்து அணி.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

நேற்று முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்படைந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

முதலில் இறங்கிய ஜெய்ஸ்வால் ரோகித் ஜோடியில், கேப்டன் ரோகித் 2 ரன்னில் வெளியேற அடுத்து வந்த விராட் கோலி டக் அவுட் ஆக, தொடர்ந்து சர்பராஸ் கான் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் ஜோடி நிதானமாக விளையாடியது. இருப்பினும் ஜெய்ஸ்வால் 13 ரன்னில் வெளியேற, பண்ட் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்,

தொடர்ந்து கேஎல் ராகுல், ஜடேஜா,அஸ்வின் என அடுத்தடுத்து டக் அவுட் ஆகினர். குல்தீப் 2 ரன் எடுக்க பும்ரா 1 ரன்னில் வெளியேறினார்.

இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. குறிப்பாக 5 வீரர்கள் டக்அவுட் ஆகியுள்ளனர். சொந்த மண்ணில் இந்திய அணி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.

  • 90s Favourite Actress Kanaka Recent News Goes Viral பரிதாப நிலையில் கனகா… காரணமே இவங்க தானா? போட்டுடைத்த பிரபலம்!
  • Views: - 873

    0

    1