தமிழ் சினிமாவில் திரைப்பட நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இப்படி பண்முகம் கொண்டு சிறந்து விளங்கி வந்தவர் தான் நடிகர் ராஜ்கிரண். இவர் தமிழ் திரை உலகில். கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பெரும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.
சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி பல்வேறு புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்து வைத்த பெருமை இவருக்கே சேறும் அந்த வகையில் வைகை புயல் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது நடிகர் ராஜ் கிரண் தான். இவர் என்னை பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே , அரண்மனைக்கிளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அனைவரது கவனத்தை ஈர்த்தார்.
குறிப்பாக ஹீரோக்கு ஏற்ற தோற்றமே இல்லாமல் தனது மிகச் சிறந்த நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த ஹீரோவாக இவர் பார்க்கப்பட்டார். பின்னர் வயது முதிர்ச்சி அடைந்த பிறகு வேங்கை , கிரீடம் , பாண்டவர் பூமி , நந்தா, சண்டக்கோழி , கிரீடம் உள்ளிட்ட பல திரைப்படங்களில். அப்பா கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறார் நடிகர் ராஜ்கிரன்.
நடிகர் ராஜ்கிரண் எப்போதும் தனது சினிமா தொழிலுக்கு மிகவும் நேர்மையாக நடந்து கொள்வது வழக்கமான ஒன்று அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தபோது வில்லனாக நடிக்க பல கோடிகள் கொடுத்து வாய்ப்பு கொடுக்கப்பட்டதாம். ஆனால், அந்த வாய்ப்பை வேண்டாம் என அறவே மறுத்திருக்கிறார் நடிகர் ராஜ்கிரன் .
இதையும் படியுங்கள்: Live-in Relationship’ல் ஏமாற்றம்? கடன் பிரச்சனையில் சிக்கி தவித்தேன் – நடிகை சுனைனா Open Talk!
அதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய அவர். தவமாய் தவமிருந்து படத்துக்கு பிறகு வில்லனாக நடிக்க ஐந்து மடங்கு சம்பளம் தரேன் அப்படின்னு எனக்கு வாய்ப்பு கொடுத்தாங்க. ஆனால் அவங்கள நான் திட்டி தான் அனுப்பினேன். என்னை எல்லாரும் அப்பா மாதிரி பாக்குறாங்க நான் வில்லனா நடிச்சா எவன் பார்ப்பான்?
நான் என்னோட சுயம் எப்படியோ அப்படிப்பட்ட கதாபாத்திரையில் மட்டும்தான் நடிப்பேன் என அந்த பல கோடி பணத்தை வேண்டாம் என உதறி தள்ளினேன் என ராஜ்கிரண் கூறி இருக்கிறார். அவருடைய இந்த நேர்மையான குணத்தையும் தன் மீது நம்பிக்கை இருக்கும் மக்கள் விரும்பும் படியான நடிப்பை வெளிப்படுத்தும் எண்ணத்தையும் வெகுவாக மக்கள் பாராட்டி தள்ளி இருக்கிறார்கள்.