என் புருஷனுக்கு அந்த கட்ஸ் இருக்கு… பிக்பாஸ் ரஞ்சித் குறித்து நடிகை பிரியா ராமன் பளீச்!
Author: Udayachandran RadhaKrishnan17 October 2024, 2:26 pm
பிக் பாஸ் சீசனில் பங்குபெற்ற நடிகர் ரஞ்சித் குறித்து சில தகவல்களை கூறியுள்ளார் அவரது மனைவும் நடிகையுமான பிரியா ராமன்.
தமிழ் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே சூடுபிடித்து வருகிறது. கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி பிக் பாஸாக நுழைவதை பார்க்கவே நிக்ழ்ச்சியை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் சீசனில் ரஞ்சித் ஃபேக் கேம் ஆடுகிறார். அவர் அவராவே இதில் இல்லை என சக போட்டியாளர்கள் குற்றம்சாட்டி நாமினேட் செய்தனர்.
மனதளவில் உடைந்த ரஞ்சித், கேமரான முன் நின்று யா என்னை காரி துப்பினாலும் பரவாயில்லை, ஆனால் பிரியா நீ மட்டும் என்னை தப்பா நினைக்காதே என கண்ணீருடன் பேசியது உருக வைத்தது.
இந்தநிலையில் பிரியா ராமன் அளித்த பேட்டியில், ரஞ்சித்தை ப்ரொமோஷன் செய்ய சிலர் தன்னை அணுகியதாகவும் நான் முடியாது என மறுத்துவிட்டதாக கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன் கணவர் வெள்ளந்தியாக உள்ளதாகவும், காசு கொடுது புரோமோஷன் செய்து வெற்றி பெற வைக்கலாம் என நிறுவனங்கள் கூறியதாகவும் அதற்கு Paid புரோமோஷன் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை என தான் கூறிவிட்டதாக தெரிவித்த அவர், சில போட்டியாளர்கள் பிஆர் மூலம் தங்களை விளம்பரப்படுத்தி ₹3 லட்சம் ₹4 லட்சம் செலவு செய்வதாக கூறினார்.
மேலும் எங்களுக்கு பிரபலம் தேவையில்லை, காசு கொடுத்து ஃபேம் ஆக வேண்டிய அவசியமில்லை, என் கணவரும் நல்ல நடிகர், சீரியலில் நடித்திருக்கிறார், கவுண்டம்பாளையம் படத்தை இயக்கி நடித்துள்ளார், அவர் பிரபலமாகத்தான் உள்ளார் என கூறியதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: பிரபல வில்லன் நடிகருடன் விரைவில் டும்டும்டும்..? காதலை உறுதி செய்த சேரன் பட நாயகி..! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்..!
மேலும் ரஞ்சித் சினிமாவை விட்டு எங்கும் போகவில்லை தொடாந்து அவர் பயணம் செய்து கொண்டுதான் இருக்கிறார். அவர் வெள்ளந்தியாக இருப்பது தவறு கிடையாது, அவரிடம் ஒரு ப்யூரிட்டி உள்ளது. எனக்கு ரஞ்சித் செய்வது தவறாக தெரியவில்லை என கூறினார்.
நிகழ்ச்சியில் இருந்து ரஞ்சித் வெளியே போகிறேன் என கூறியது பற்றி பிரியா ராமனிடம் கேள்வியை வைத்த போது, அந்த தைரியம் யாருருக்கு வரும், இதுக்கு தனி கட்ஸ் வேண்டும், அவர் அப்படி சொன்னதும் எனக்கு அவர் மீதான மதிப்பு கூடியது என்று தெரிவித்தார்.