மாதவிடாய் வலியை போக்க மருந்துகளை எடுத்துக் கொள்ளலாமா…???

Author: Hemalatha Ramkumar
17 அக்டோபர் 2024, 2:59 மணி
Quick Share

ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் என்பது மிகவும் கொடூரமானதாக இருக்கும். பொறுத்துக் கொள்ள முடியாத மாதவிடாய் வலியை அனுபவிக்கும் பெண்கள் ஒரு சில சமயங்களில் வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அதனை தணிப்பதற்கு மருந்துகளை சாப்பிடுவார்கள். ஆனால் மாதவிடாய் வலியை தணிப்பதற்கு மருந்துகள் சாப்பிடலாமா கூடாதா என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். பல பெண்களுக்கு தங்களுடைய மாதவிடாய் சுழற்சியின் போது வலி ஏற்படும். இது சகஜமான ஒன்றுதான். 

இந்த வலியானது ஒவ்வொரு பெண்களைப் பொறுத்து அசௌகரியம் முதல் தீவிரமான வலி வரை இருக்கலாம். இதனை சமாளிப்பதற்கு மாதவிடாய் வலிக்கான காரணங்கள், ஒரு சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்தல் மற்றும் எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும் என்பது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். மாதவிடாயின் போது அதிகப்படியான புராஸ்டாகிளாண்டின் அளவுகள் இருப்பது மோசமான மாதவிடாய் வலியை தூண்டலாம். பல பெண்களில் என்டோமெட்ரியோசிஸ், ஃபைப்ராய்டுகள் மற்றும் இடுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் காரணமாக மாதவிடாய் வலி ஏற்படுகிறது. 

மாதவிடாய் வலிக்கான இயற்கை தீர்வுகள்

*அடிவயிற்றில் உள்ள தசைகளை ஆற்றி, வலியை குறைப்பதற்கு நீங்கள் ஒத்தடம் கொடுக்கலாம். இதற்கு ஹீட்டிங் பேடு அல்லது வாட்டர் பாட்டிலில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி பயன்படுத்தலாம். 

*நடை பயிற்சி அல்லது நீட்சி போன்ற லேசான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாகி, வயிற்று வலி குறையும். 

*இஞ்சி, புதினா, சாமந்தி போன்ற சில மூலிகை தேநீர்களை சாப்பிடுவது வீக்கத்தை குறைத்து, மாதவிடாய் அசௌகரியத்தை போக்கும். 

*ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் வீக்க எதிர்ப்பு சத்துகளாக கருதப்படுகிறது. இது புராஸ்டாகிளாண்டின் ஹார்மோன் அளவுகளை குறைத்து வலியை தணிக்கிறது.

*அதிக அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் மூலிகை தேநீர் பருகுவது வயிற்றில் ஏற்பட்டுள்ள உப்புசத்தை குறைத்து, வலியை போக்கும். 

*மாதவிடாய் வலியிலிருந்து விடுபடுவதற்கு அக்குபஞ்சர் மற்றும் மசாஜை முயற்சி செய்து பார்க்கலாம். 

இதையும் வாசிக்கலாமே: வாரத்துக்கு இரண்டு முறை இத பண்ணா உங்க பற்கள் வெள்ளை வெளேரென ஜொலிக்கும்!!!

மாதவிடாயின் போது ஒரு பெண் எப்போது மருந்துகளை எடுக்கலாம்? 

ஒரு சில பெண்களுக்கு இயற்கை வைத்தியங்களே போதுமானதாக இருக்கும். எனினும் சில பெண்களுக்கு பெயின் கில்லர்கள் சாப்பிட்டால்தான் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஐபுப்ரோபன் அல்லது நாப்ராக்சின் போன்ற மருந்துகள் புராஸ்டாகிளாண்டின் உற்பத்தியை நிறுத்தி, வீக்கத்தை குறைத்து வலியில் இருந்து விடுபட உதவுகிறது. மருந்துகளை எப்போதும் பொறுப்புடன் கையாள வேண்டும். 

மருந்துகளில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள். மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மட்டுமே மருந்துகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் வலி நிவாரணிகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பெப்டிக் அல்சர், சிறுநீரகப் பிரச்சனைகள் அல்லது கல்லீரல் நச்சு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். எனினும் தொடர்ச்சியாக உங்களுக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஒவ்வொரு மாதமும் ஏற்படும் பட்சத்தில் கட்டாயமாக இதற்கு மருத்துவ உதவியை நீங்கள் நாட வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 69

    0

    0

    மறுமொழி இடவும்