மீண்டும் பாலிவுட்டில் கடையை திறக்கும் ஏ.ஆர் முருகதாஸ்.. கை கொடுத்த ‘கான்’கள்!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2024, 6:11 am

விஜய், அஜித்தை தூக்கி விட்ட இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அடுத்த இன்னிங்சை தொடங்க உள்ளார்.

அஜித்தை வைத்து மாஸ் ஹிட் படம் கொடுத்தவர் ஏஆர் முருகதாஸ், தீனா படத்தை தொடர்ந்து ரமணா படத்தை எடுத்தார்.

தொடாந்து கஜினி, 7ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி என அடுத்தடுத்து அதிரிபுதிரி ஹிட் படங்களை கொடுத்து முன்ன நடிகர்களை தூக்கி விட்டார். ஆனால் தர்பார் படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால் டாப்பில் இருந்து ஏஆர் முருகதாஸ்க்கு பயங்கர சரிவு ஏற்பட்டது.

கஜினி படத்தை இந்தியில் எடுத்து மாஸ் காட்டிய ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளார்.

மேலும் படிக்க: உருவ கேலி செய்த அஜித்?.. ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து டாப் சீக்ரெட்டை போட்டுடைத்த பிரபலம்..!

ஆனால் அதற்குள் சல்மான் கானின் சிக்கந்தர் பட வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் கஜினி 2 படம் எடுக்கலாமா என அமீர் கான் அழைப்பு விடுத்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார் ஏஆர் முருகதாஸ்.

சல்மான் கான் மற்றும் சிவகார்த்திகேயன் படத்தை முடித்துவிட்டு உடனே அமீர் கானுடன் கஜினி 2 படம் எடுக்க முடிவு செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கஜினி 2 வை தமிழில் சூர்யாவை வைத்து எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே சூர்யாவுடன் 2 படங்களில் பணியாற்றிய பின் சில கருத்து வேறுபாட்டால் இருவரும் சேரவில்லை. கஜினி 2வுக்காக இருவரும் இணைந்தால் பெரிய ஹிட் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!