காலத்துக்கும் நின்னு பேசும்.. சாய் பல்லவி ரசிகர்களுக்கு SLIPPER SHOT கொடுத்த நித்யாமேனன்!
Author: Udayachandran RadhaKrishnan18 October 2024, 4:56 pm
தகுதியில்லாத நடிகை என கிண்டல் செய்த சாய் பல்லவி ரசிகர்களுக்கு நடிகை நித்யா மேனன் பதிலடி கொடுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை நித்யா மேனன் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும கச்சிதமாக நடிக்கக்கூடியவர். வெப்பம், ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் என இவர் நடித்த படங்களில் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் மக்கள் மனதில் நின்று போகும்.
அப்படித்தான கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.
தனுஷ், நித்யாமேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டேர் நடித்து அனிருத் இசையமைப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியானது திருச்சிற்றம்பலம். ஷோபான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்ற நித்யாமேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, எந்த நடிகர்கள், நடிகைகளுக்கு தாம் நடித்த ஒரு சில கதாபாத்திரங்கள் அவர்கள் வாழ்க்கையில் முக்கிய பகுதியாக மாறும், அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான் ஷோபனா.
இந்த படம் வெற்றியடைய காரணமான தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், இயக்குநர் மித்ரன் ஜவஹர் சாருக்கு நன்றி.
இதையும் படியுங்க: ரசிகர்களுக்கு டாட்டா காட்டும் ரம்யா பாண்டியன்.. விரைவில் காதலருடன் டும்டும்டும்…!
தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் சாருக்கும் நன்றி, உங்களுடன் பணியாற்றியது நான் மிகவும் பெருமைப்படே வேண்டிய தருணம். ராஷி கண்ணா என் தோழி, அவருக்கும் நன்றி என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தேசிய விருது வாங்க தகுதியில்லாத நடிகை என சாய் பல்லவி ரசிகர்கள் கூறியதற்கு நித்யா மேனன் பதிலடி கொடுதுள்ளார்.
இது குறித்து அவர் பிரபல யூடியூப் சேனலுக்கு பதிலளித்துள்ளார். அதில், தேசிய விருது வாங்கியிருக்கேன். எல்லாத்துக்கும் ஒரு திருப்புமுனை அமையும் எனக்கு அது அமைஞ்சிருக்கு.. அடுத்தவங்க என்ன பேசுறாங்க, விமர்சிக்கிறாங்க அத பற்றி எனக்கு கவலையுமில்ல, அவங்களை பற்றி பேச வேண்டிய அவசியமுமில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.