நிம்மதியான இரவு தூக்கத்தை தூண்டும் இரகசியங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
18 அக்டோபர் 2024, 5:47 மணி
Quick Share

தரமான இரவு தூக்கம் என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது. இது நம்முடைய உடல் மற்றும் மனதிற்கு ஓய்வையளித்து, மீண்டும் புத்துணர்ச்சியோடு அடுத்து செயல்படுவதற்கு உதவுகிறது. ஆனால் உலகம் முழுவதும் பலர் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தோராயமாக 30 சதவீத மக்கள் தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக 10 முதல் 15% பெரியவர்கள் நாள்பட்ட தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். ஆனால் ஆழமான தூக்கத்தை பெறுவதற்கு ஒரு சில யுக்திகள் உள்ளன. அவற்றை பின்பற்றினால் படுத்த உடனேயே உறங்கி நல்ல தரமான தூக்கத்தை பெறலாம். 

*உங்களுடைய மனம் ரிலாக்ஸாக இருந்தால் உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். எனவே உங்கள் உடல் மற்றும் மனதில் இருக்கும் மன அழுத்தத்தை அவிழ்த்து விடுங்கள். உங்களுக்கு தூக்கம் இயற்கையாகவே வந்துவிடும். ஆனால் இந்த மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு நீங்கள் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும். அவற்றில் ஒன்று தியானம். இது உங்களை ஆழ்ந்த ஓய்வுக்கு எடுத்துச் சென்று மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. தியானம் உங்களுடைய நரம்பு மண்டலத்தை அமைதிபடுத்தி, மனதை ஆற்றுகிறது. உங்கள் மனதுக்கு ஆற்றலை அளிக்கும் ஒரு வலிமையான கருவியாக தியானம் பார்க்கப்படுகிறது. 

*அடுத்ததாக படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உங்களுடைய தோல்விகள் மற்றும் கவலைகளை பற்றி நினைப்பதை தவிர்த்து விடுங்கள். இதனால் நீங்கள் சோர்வாகவும், எரிச்சலாகவும் உணர்வீர்கள். மாறாக உங்களுடைய சாதனைகள் மற்றும் பாசிட்டிவான தருணங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு கிடைத்த நல்லவற்றிற்கு நன்றி கூறலாம். எனவே தூங்குவதற்கு முன்பு எப்பொழுதும் பாசிட்டிவான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்ல தூக்கத்தை வரவழைப்பதற்கு உதவும். 

*”நான் விரைவாக தூங்கி விட வேண்டும்” என்று நினைத்துக் கொண்டே இருந்தால் கட்டாயமாக உங்களுக்கு தூக்கம் வராது. அதற்கு பதிலாக உங்களை நீங்களே அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். அமைதியான எண்ணங்கள் அல்லது ஆழ்ந்த மூச்சு பயிற்சிகளை எடுப்பது உங்களுக்கு ஓய்வு நிலைக்கு அழைத்துச் செல்லும். இந்த நேரத்தில் யோக நித்ரா பயிற்சி செய்வது பயனுள்ளதாக அமையும். 

*இரவு உணவை விரைவாக சாப்பிடுங்கள். தாமதமாக சாப்பிட்டால் உங்களுடைய மெட்டபாலிக் விகிதம் அதிகமாக இருக்கும். இதனால் உங்களுடைய தூக்கம் கெடலாம். 

இதையும் வாசிக்கலாமே: ஹை BPய இவ்வளோ ஈசியா கண்ட்ரோல் பண்ண முடியுமா…?? 

*நாளை பற்றிய பதட்டம் அல்லது கவலை எதுவும் வைத்திருக்க வேண்டாம். அதுமட்டுமல்லாமல் கடந்து வந்த விஷயங்களை பற்றியும் நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள்.  இது போன்ற எண்ணங்கள் உங்களை தூங்க விடாது. உங்களை தூங்கவிடாமல் செய்யும் விஷயம் என்ன என்பதை கண்டுபிடியுங்கள். அதற்கான தீர்வை பெற்றால் நிச்சயமாக உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.

தினமும் பிராணயாமம் மற்றும் தியானம் போன்றவற்றை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி செய்யுங்கள். நிச்சயமாக உங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். 

*தூங்கும் பொழுது இடதுபுறமாக படுத்து உறங்கு உறங்குவது நல்ல தூக்கத்தை வரவழைக்கும் என்று சொல்லப்படுகிறது. இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது தாமதமாக உணவு சாப்பிடுவது போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். மேலும் வலதுபுறமாக படுத்து உறங்குவதும் மோசமான  தூக்கத்தை கொடுக்கலாம். 

உங்களுடைய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு தரமான தூக்கம் மிகவும் முக்கியம். தொடர்ச்சியாக உங்களுக்கு தூங்குவதில் சிக்கல் இருந்தால் மருத்துவரை அணுகி அதற்கான தீர்வை நாடுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 73

    0

    0

    மறுமொழி இடவும்