அதிக லாபத்தை கொடுத்ததா வேட்டையன்..? வெளியானது வசூல் விபரம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2024, 10:33 am

லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

படம் வெளியான 4 நாட்களில் நல்ல வசூல் குவித்த நிலையில், மழை காரணமாக வரவேற்பு குறைந்தது. படத்தின் கதை நல்லா இருக்கு, திரைக்கதை அமைத்த விதம் ரஜினிக்காகவே செய்துள்ளதாக விமர்சனம் எழுந்தது.

இருப்பினும் இந்த படம் லாபமா? நஷ்டமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. படம் உலகம் முழுவதும் ₹100 கோடி ஷேர் செய்துள்ளது.

இதையும் படியுங்க: சரத்குமாரிடம் அடைக்கலம் தேடிய நடிகை.. சீனுக்குள் வந்த பிரபுதேவா!

வேட்டையன் படம் ரிலீசுக்கு முன்பே ₹200 கோடி வசூல் பிசினஸ் மூலம் கிடைத்துள்ளது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு படம் நிச்சயம் லாபகரம் தான் என கூறப்படுகிறது.

ஒரு வேளை கனமழை இல்லாமல் இருந்திருந்தால் படம் நல்ல வசூலை குவித்திருக்கும் என சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 303

    1

    0