காஷ்மீரி தம் ஆலு: சப்பாத்தி, பூரிக்கு செம காம்பினேஷனா இருக்கும்… டிரை பண்ணி பாருங்க!!!

Author: Hemalatha Ramkumar
19 October 2024, 11:02 am

பொதுவாக சப்பாத்தி, பூரிக்கு வெஜிடேரியன் சைடிஷ் செய்யும் போது உருளைக்கிழங்கு மசால் அல்லது காய்கறி குருமா போன்ற தொட்டுக்கைகளை சமைப்போம். ஆனால் இன்று சப்பாத்தி மற்றும் பூரிக்கு ஏற்ற வகையில் மிகவும் வித்தியாசமான சுவையில் காஷ்மீரி தம் ஆலு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 

காஷ்மீரி தம் ஆலு செய்வதற்கு முதலில் 10 காஷ்மீரி சிவப்பு மிளகாய் மற்றும் 10 முந்திரி பருப்பை சுடு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளலாம். இதற்கு இடையில் 6 முதல் 7 பேபி பொட்டேட்டோவை வேக வைத்து தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நாம் வேகவைத்த பேபி பொட்டேட்டோக்களை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதையும் வாசிக்கலாமே: ரன்னிங் ஷூக்களை மாற்றுவதற்கான சரியான நேரத்தை கண்டுபிடிப்பது எப்படி…???

இப்போது அதே கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், சோம்பு, ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் ஓரளவு வதங்கியதும் அதில் ஒரு டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்குங்கள். இது வதங்கி கொண்டிருக்கும் போது நாம் ஊற வைத்த மிளகாய் மற்றும் முந்திரியை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்து அதையும் வதக்கி கொண்டிருக்கும் பொருட்களோடு சேர்த்து கிளறவும். 

ஒரு சிறிய கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் அளவு தயிர் எடுத்து அதில் 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள், 1/2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட்டு அதனையும் கடாயில் சேர்த்து விடலாம். இப்போது நாம் சேர்த்த மசாலாக்களின் பச்சை வாசனை மறைந்து எண்ணெய் தனியாக பிரிந்து ஓரங்களுக்கு வரும்போது வறுத்து வைத்த பேபி பொட்டேட்டோவை சேர்த்து கிளறவும். 

இதற்கு தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடங்களுக்கு வேகவிடவும். இறுதியாக கஸ்தூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து சுடச்சுட பூரி சப்பாத்தியோடு பரிமாறவும்.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!