விவாகரத்துக்கு விருப்பமில்லை… தனுஷ் – ஐஸ்வர்யா வழக்கில் கோர்ட்டில் நடந்த திருப்பம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2024, 12:07 pm

ரஜினியின் மூத்த மகள் நடிகர் தனுஷை காதலித்து கரம் பிடித்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த ஜோடி, ஜனவரி 2022ஆம் ஆண்டு பிரிந்து வாழ்வதாக அறிவித்தனர். இது இரு குடும்பத்தினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

இருவரும் பிரிந்தது திரைத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். அவ்வப்போது மகன்களின் பள்ளி விழாக்களில் தென்பட்டு வந்தனர்.

இதையும் படியுங்க: என்னை அண்ணானு மட்டும் கூப்பிடாத.. சாய் பல்லவியிடம் வழிந்த சிவகார்த்திகேயன்..!!

இந்த நிலையில் இருவரின் விவாகரத்து வழக்குகள் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கடந்த அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நிலையில், ஆஜராகாததால் இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்றும் ஆஜராகததால் மீண்டும் இந்த வழக்கு நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இருவரும் ஆஜராகாதது விவாகரத்துக்கு விருப்பமில்லை என்பது தெள்ள தெளிவாகியுள்ளது. ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இருவரும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளார்களா என்பது போக போகத் தெரியும்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ