ஒரே நாளில் அதிரடி ரெய்டு.. சிக்கிய 329 கிலோ ‘பொருள்’

Author: Hariharasudhan
19 October 2024, 2:20 pm

கோவை மதுக்கரை பகுதியில் சுமார் 329 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மதுக்கரை காவல் நிலைய போலீசார், சீராபாளையம் மற்றும் திருமலையாம் பாளையம் அருகே சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : அடிசக்க.. தீபாவளிக்கு 4 நாள் லீவ்.. ஹேப்பி அண்ணாச்சி!

அப்போது, புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த சீராபாளையத்தைச் சேர்ந்த முருகன் (40) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து சுமார் 209 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், திருமலையாம் பாளையத்தைச் சேர்ந்த நூர்முஹம்மத் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 120 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இவ்வாறு மொத்தம் சுமார் 329 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 166

    0

    0