மாதவிடாய் ஆரோக்கியம்: சானிட்டரி நாப்கின்களை எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்…???

Author: Hemalatha Ramkumar
19 அக்டோபர் 2024, 5:13 மணி
Quick Share

மாதவிடாய் சமயத்தில் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். வழக்கமான முறையில் சுத்தம் செய்தல் மற்றும் அடிக்கடி நாப்கின்களை மாற்றாவிட்டால் அதனால் தடிப்புகள் மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். அது மட்டுமல்லாமல் மாதவிடாய் சமயத்தில் நல்ல சுகாதாரத்தை பேணாவிட்டால் அதனால் சிறுநீரக தொற்றுகள் அல்லது ஈஸ்ட் தொற்றுகள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. மாதவிடாய் சமயத்தில் பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின்களை எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பது பல பெண்களுக்கு தெரிவதில்லை. இதனை அறியாமல் நீண்ட நேரத்திற்கு நாப்கின்களை பயன்படுத்தி ஒரு சில தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள். எனவே சானிட்டரி நாப்கின்களை எத்தனை மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும், ஒருவேளை அப்படி மாற்றாவிட்டால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 

நாப்கின்களை நீண்ட நேரத்திற்கு மாற்றாமல் இருக்கும் பொழுது அந்த இடத்தில் ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டு, அதனால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்வதற்கான சூழல் உருவாகிறது. நீண்ட நேரத்திற்கு உங்களுடைய தோல் ஈரமான பேடுகளோடு தொடர்பு கொண்டு, உங்களுக்கு பூஞ்சை தொற்றுகள் மற்றும் தடிப்புகள் ஏற்படலாம். மேலும் ஒரு சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. 

மாதவிடாய் சமயத்தில் ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்சனை துர்நாற்றம். பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வெளியேறும் போது அது பாக்டீரியா, சளி மற்றும் உடலில் உள்ள பல்வேறு திரவங்களுடன் கலந்து வெளியேறுகிறது. இது நீண்ட நேரத்திற்கு நாப்கினில் அடைத்து வைக்கப்படும் போது அது ஒரு மோசமான துர்நாற்றத்தை அளிக்கும். ஈரப்பதம் நீண்ட நேரத்திற்கு பிடித்து வைக்கப்படும்போது அதில் தடிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளம். 

இதையும் படிக்கலாமே: வெயிட் குறையவே மாட்டேங்குதுன்னு சொல்ல இனி சான்சே இல்ல… அப்படி ஒரு ரிசல்ட் கொடுக்கும் இந்த பானம்!!!

கூடுதலாக நாக்கினை நீண்ட நேரத்திற்கு அணிந்திருந்தால் அதனால் உங்களுடைய தோல் சிவந்து போகலாம். சானிட்டரி நாப்கினை அதிக நேரத்துக்கு பயன்படுத்தும் போது அங்கு பாக்டீரியாக்கள் குவிந்து ரத்தத்துடன் சேர்ந்து வெளியேறும். 

எனவே ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி நாப்கினை மாற்ற வேண்டுமா? சொல்லப்போனால் உங்களுக்கு லேசான மாதவிடாய் இரத்தப்போக்கு இருந்தால் ஒவ்வொரு 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை சானிட்டரி நாப்கின்களை மாற்றுவது நல்லது. அடிக்கடி அவற்றை மாற்றுவது பாக்டீரியா மற்றும் கெட்ட துர்நாற்றம் ஏற்படுவதை நீங்கள் தவிர்க்கலாம். ஒருவேளை உங்களுக்கு அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்கு இருக்குமாயின் ரத்தம் கசியாமல் இருப்பதற்கு உங்கள் பேடுகளை அடிக்கடி மாற்றுங்கள். சானிட்டரி பேடுகளை மட்டுமல்லாமல் டேம்பான்கள் மற்றும் மென்ஸ்ட்ரூவல் கப்புகளை பயன்படுத்துபவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டேம்பான்களை பிறப்புறுப்பில் வைத்து விட்டு மறந்து விடுவதால் மிக மோசமான டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் போன்ற தொற்றுகள் ஏற்படலாம். ஆகையால் டேம்போன்கள் அல்லது மென்ஸ்ட்ரூவல் கப்புகளை ஒவ்வொரு 8 முதல் 10 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 81

    0

    0

    மறுமொழி இடவும்