சிறுமியை கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தை.. வால்பாறை அருகே பகீர் சம்பவம்!

Author: Hariharasudhan
19 October 2024, 5:49 pm

கோவை வால்பாறை எஸ்டேட் அருகே சிறுத்தை தாக்கியதில் 4 வயது வடமாநில சிறுமி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பிகேடிக்குச் சொந்தமான ஊசிமலை எஸ்டேட் உள்ளது. இங்குள்ள எஸ்டேட் பகுதி ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ஐயூன் அன்சாரி (41) – நசீரான் தம்பதி. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர்களுக்கு நான்கு வயதில் அப்துல் கதும் என்ற பெண் குழந்தை உள்ளார்.

இந்த நிலையில், இவர் இன்று (அக்.19) தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை, கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியை வாயில் கவ்வியுள்ளது. பின்னர், அக்குழந்தை கதறிய நிலையிலும், அருகிலுள்ள 14ஆம் எண் காட்டிற்குள், சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது.

அப்போது, அவருடைய தாயார் கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுத்தையை துரத்தி உள்ளனர். இதனால், அந்த சிறுத்தை அங்கு உள்ள காட்டிற்குள் சிறுமியை போட்டுவிட்டுச் சென்றுள்ளது. பின்னர் இது குறித்து அறிந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ரூ.30,000 செலுத்தினால் ஆபாசப் படம் பார்த்ததில் இருந்து விடுபடலாம்.. சைபர் கிரைம் முக்கிய எச்சரிக்கை!

மேலும், இது குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 226

    0

    0