பிக்பாஸில் இருந்து வெளியேறிய அர்னவ்… குஷியில் குத்தாட்டம் போட்ட Ex மனைவி – வீடியோ !

Author:
19 October 2024, 5:56 pm

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதே மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய விஷயமாக பேசப்பட்டு வந்தது. நடிகர் விஜய் சேதுபதி எல்லாருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போலவே சிறப்பாக தன்னுடைய பணியை செய்து வருகிறார் .

இந்த சர்ச்சைக்குரிய போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கும் ஜோடி தான் அர்னவ் மற்றும் அன்சிதா. இவர்கள் இருவரும் காதல் ஜோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதர் என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அவரை கர்ப்பமாகிவிட்டார். அவர் கர்ப்பமாக இருக்கும் போது அர்னவ் அவரை பிரிந்து வேறொரு சீரியல் நடிகையான அன்ஷிகா உடன் கள்ள உறவு கொண்டிருந்தார்.

divya -updatenews360

இதனால் திவ்யா அவரை கடுமையாக திட்டி போலீசில் புகார் கொடுத்ததெல்லாம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அர்னவ் – திவ்யாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தும் கூட மனைவி குழந்தைகளை சென்று பார்க்காமல் கூட கள்ளக்காதலி அன்சிதாவுடன் அஜால் குஜால் செய்து வந்தார். இப்படியாக இருந்த சமயத்தில் இந்த சர்ச்சைக்குரிய ஜோடி பிக் பாஸ் வீட்டில் ஜோடி போட்டியாளர்களாக பங்கேற்றுகிறார்கள்.

இதுதான் மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வீட்டில் அவர்கள் இருவரும் எரியும் பூனையுமாக நடந்து கொள்கிறார்கள். முன்னதாக நடிகை அன்ஷிதாவுக்கு சொம்பு தூக்கி பட்டதை கொடுத்து அவரை அப்செட் ஆக்கிவிட்டார். இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகிய இருவரும் குறைவான வாக்குகள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருந்து வந்த நிலையில் தர்ஷாவை விட குறைவான வாக்குகள் பெற்றிருந்தார் அர்னவ்.

மேலும், தர்ஷாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளார். அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் அவரது பங்கு பெரிதாக இல்லை. மேலும் சோசியல் மீடியாவில் அவருக்கு நற்பெயர் இல்லை தொடர்ந்து அவரை விமர்சித்து தான் வந்தார்கள். இதனால் மக்கள் இதயத்தில் இடம் பிடிக்க முடியாது… கெட்ட பெயர்தான் வாங்க போகிறேன் என்று தெரிந்து கொண்டார் அர்னவ்.

bigg boss s8 arnav evicted

இதையும் படியுங்கள்: உங்களுக்கு வயசே ஆகாதா? நதியாவிடம் வழிந்த பிரபலம் – என்ன சொன்னாங்க தெரியுமா?

இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக சமீபத்திய தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. இதை அடுத்து அர்னவ்வின் எக்ஸ் மனைவி ஆன திவ்யா குத்தாட்டம் போட்ட வீடியோவை இணையத்தை வெளியிட அர்னவ் வெளியேறிய தான் சந்தோஷத்தில் இவர் இப்படி குத்தாட்டம் போடுகிறார் என நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!