நெல்சன் செய்யும் சம்பவம்…ஒன்று சேரும் தனுஷ் – ஐஸ்வர்யா : ரஜினி ஹேப்பி!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2024, 6:04 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமா தயாராகி வரும் படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார்.

ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பை பாதியில் முடித்து விட்டு உடல்நலக்குறைவால் ரஜினி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பினார்.

சில வாரம் ஓய்வில் இருந்த ரஜினி, மீண்டும் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இதை முடித்த கையோடு ஜெயிலர் 2 படத்தில் கலந்து கொள்ள ரஜினி ஆர்வமாக உள்ளார்.

அதை விட இந்த படத்துக்காக நெல்சன் பயங்கர பிளானை போட்டுள்ளார். ஜெயிலர் முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்த அத்தனை நடிகர்களும் இதில் நடிக்க பேச்சுவார்தை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க: கங்குவா படம் பிரமாண்ட இயக்குநர் படத்தின் காப்பியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அதே போல சிறப்பு தோற்றத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது இந்த தருணத்திறக்க காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜெயிலர்-2 பட பூஜையில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் ஜோடியாக வந்து கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. நெல்சன் படத்துக்காக இருவரும் ஒன்றாக வரப்போகிறார்கள் என்பதை விட ரஜினியின் உடல்நிலை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், விவாகரத்து வழக்கில் நேரில் ஆஜராகாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!