டயாபடீஸ் இருந்தா கூட இதெல்லாம் பண்ணா ஈஸியா வெயிட் லாஸ் ஆகிடும்!!!

Author: Hemalatha Ramkumar
21 October 2024, 11:20 am

டயாபடீஸ் பிரச்சனையை கட்டுப்படுத்துவது மற்றும் உடல் எடை குறைப்பு ஆகிய இரண்டுமே முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சி தேவைப்படுகின்ற முக்கியமான இரு விஷயங்கள். டயாபடீஸ் பிரச்சனையோடு வாழ்பவர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது மிகப்பெரிய ஒரு சவாலாக அமையலாம். கொழுப்பு நமது உடலில் சேகரிக்கப்படும் போது அது சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி, பிற உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதிக்கும். இதனால் இன்சுலின் எதிர்ப்பு திறன் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக நம்முடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே உடல் எடையை கட்டுக்குள் வைத்து குளுக்கோஸ் அளவுகளை சீராக பராமரிப்பது அவசியம். எனவே டயாபடீஸ் பிரச்சனையோடு வாழ்பவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு என்ன மாதிரியான குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம். 

நீர்ச்சத்து என்ற தங்க விதி உங்களுடைய உடலை எல்லா நேரத்திலுமே நீரற்றமாக வைப்பது அவசியம். இது மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடை குறைப்பு செயல்முறையை தூண்டி சிறுநீரகங்கள் சிறந்த முறையில் செயல்படுவதை உறுதி செய்யும். எனவே உங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள். 

ஒரு சரிவகித உணவு என்பது உடல் எடை இழப்பு மற்றும் ரத்த சர்க்கரை பராமரிப்பு ஆகிய இரண்டிற்கும் அவசியமானது. ஆகவே முழு உணவுகளான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிடுங்கள். இந்த  உணவுகள் உங்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

சிறிய அளவு தட்டுகளை பயன்படுத்துங்கள். மேலும் நீங்கள் சாப்பிடும் உணவின் அளவை கவனிப்பது அவசியம். 

உடல் எடையை குறைப்பதற்கும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கும் உடற்பயிற்சி பெரிய அளவில் உதவும். எனவே நடை பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் போன்ற செயல்பாடுகளை செய்வது உங்களுடைய கலோரிகளை எரித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அது மட்டுமல்லாமல் இது இன்சுலின் மற்றும் ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதற்கும் உதவும். 

வழக்கமான முறையில் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவுகளை கண்காணிப்பதன் மூலமாக வெவ்வேறு உணவுகள் மற்றும் செயல்பாடுகள் உங்கள் உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அதன் மூலமாக உங்களுடைய உணவு தேர்வுகளை நீங்கள் முடிவு செய்யலாம். 

தரமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் ஆகிய இரண்டுமே உடல் எடை குறைப்பதற்கும் மிகவும் முக்கியம். உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்காவிட்டால் அது பசி ஹார்மோனை சீர்குலைக்கும். இதனால் அதிகப்படியாக சாப்பிடுவீர்கள். அதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கும். எனவே தினமும் 7 முதல் 9 மணி நேரம் தரமான இரவு தூக்கம் அவசியம். 

டயாபடீஸ் பிரச்சனையோடு உடல் எடையை குறைப்பதற்கு சரியான யுக்திகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். நல்ல முடிவுகளை பெறுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும். மாற்றங்கள் படிப்படியாகவே நடைபெறும். அதற்கு பொறுமை மிகவும் அவசியம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 160

    0

    0