அடிக்கடி மூட்டில் காயங்கள் ஏற்படுகிறதா… டெய்லி இதெல்லாம் ஃபாலோ பண்ணா இனி அப்படி நடக்க சான்ஸ் இல்ல!!!
Author: Hemalatha Ramkumar21 October 2024, 12:04 pm
மூட்டுகளில் ஏற்படும் காயங்கள் ஒரே இரவில் ஏற்படுபவை அல்ல. நீண்ட காலத்திற்கு நீங்கள் பின்பற்றி வரும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் காரணமாகவே மூட்டுகளில் காயங்கள் ஏற்படுகிறது. மூட்டு வலி என்பது படிப்படியாக உங்களுடைய வழக்கமான செயல்பாடுகளை பாதிக்கலாம். ஓடுதல், நீச்சல் அடித்தல் மற்றும் காலப்போக்கில் நடப்பது கூட உங்களுக்கு சிக்கலாக மாறலாம். எனவே உங்களுடைய மூட்டு ஆரோக்கியத்தை பராமரித்து அதில் காயங்கள் ஏற்படாமல் இருப்பதை தடுப்பதற்கு உதவ நீங்கள் தினமும் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
அன்றாட உடற்பயிற்சி
ஓடுதல், நடைப்பயிற்சி மற்றும் வலு பயிற்சி போன்றவற்றை தினமும் செய்வது உங்களுடைய மூட்டுகளுக்கு ஆதரவு தரும் எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும்.
சரியான ஊட்டச்சத்து
எலும்பு அடர்த்தியை பராமரிப்பதற்கு அவசியமான கால்சியம் மற்றும் வைட்டமின் D நிறைந்த சரிவிகித உணவை தினமும் சாப்பிடுங்கள். பால் சார்ந்த பொருட்கள், பச்சை இலை காய்கறிகள் மற்றும் மீன் போன்றவற்றை சாப்பிடுங்கள்.
நல்ல தோரணை
உட்காரும்போது, நிற்கும்போது மற்றும் கனமான பொருட்களைத் தூக்கும் போது நீங்கள் சரியான தோரணையை கடைப்பிடிக்காவிட்டால் உங்களுடைய மூட்டு மற்றும் முதுகு தண்டில் பாதிப்பு ஏற்படலாம்.
போதுமான அளவு நீர்ச்சத்து
தினமும் அதிக அளவு தண்ணீர் குடிப்பது உங்களுடைய மூட்டுகள் சிறந்த முறையில் செயல்படுவதற்கு உதவும்.
உடற்பயிற்சிக்கு முன்பும் பின்னரும் செய்ய வேண்டியவை
எப்பொழுதும் உடற்பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன்பு வார்ம்-அப் பயிற்சியில் ஈடுபடுவது அவசியம். அதேபோல உடற்பயிற்சியில் ஈடுபட்ட பிறகும் காயங்களை தவிர்ப்பதற்கு உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: டயாபடீஸ் இருந்தா கூட இதெல்லாம் பண்ணா ஈஸியா வெயிட் லாஸ் ஆகிடும்!!!
சரியான காலனி உடற்செயல்பாடுகளில் ஈடுபடும் போது உங்களுக்கு நல்ல ஆதரவு தருவதற்கும், சௌகரியமாக உணர்வதற்கும் நல்ல காலணிகளை பயன்படுத்துங்கள்.
ஆரோக்கியமான உடல் எடை
ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது என்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியம். அதிலும் குறிப்பாக உங்களுடைய மூட்டு, இடுப்பு மற்றும் முதுகுக்கு இவை அவசியம்.
வழக்கமான ஹெல்த் செக்கப்
உங்களுடைய எலும்பு ஆரோக்கியத்தை வழக்கமான முறையில் கண்காணிப்பது ஏதேனும் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு உதவும்.
இந்த பழக்கங்களை உங்களுடைய அன்றாட வழக்கத்தில் பின்பற்றி வந்தால் மூட்டு மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரித்து, காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.