தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. ஆம்னி பேருந்துகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

Author: Hariharasudhan
21 அக்டோபர் 2024, 7:25 மணி
Quick Share

தீபாவளி பண்டிகைக்காக சுமார் 14 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், இன்று (அக்.21) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறையைச் சார்ந்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி, போக்குவரத்துத் துறை ஆணையர், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: காவலர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி.. மெரினா, மாமல்லபுரத்தில் அடுத்தடுத்த நிகழ்வுகள்!

இதனையடுத்து, அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் அக்டோபர் 28 முதல் அக்டோபர் 30 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 900 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 11 ஆயிரத்து 176 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து இந்த மூன்று நாட்களுக்கு 2 ஆயிரத்து 910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14 ஆயிரத்து 86 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Omni bus

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, நவம்பர் 2 முதல் நவம்பர் 4 வரையில், தினசரி இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் 3 ஆயிரத்து 165 சிறப்புப் பேருந்துகளும், மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9 ஆயிரத்து 441 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3 ஆயிரத்து 165 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 12 ஆயிரத்து 606 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 94

    0

    0

    மறுமொழி இடவும்