மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஆர்ஜே பாலாஜி… மாஸ் காட்டும் சொர்க்கவாசல்..!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2024, 8:14 pm

ஆர்ஜே பாலாஜி திரைத்துறைக்கு வருவதற்கு முன் ஆர்ஜேவாக பணியாற்றினார், . அப்போதே அவருக்கு மவுசு அதிகம்.

பின்னர் சினிமாவில் நடிகரான அவர், எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை இயக்கி நல்ல வரவேற்பையும் பெற்றார்.

சமீபத்தில் வீட்ல விஷேசம் படத்தை இயக்கியிருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சிங்கப்பூர் சலூன் படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பெண்களை வைத்து தெய்வ படங்களை எடுத்து வந்த அவர், சூர்யாவை வைத்து ஆண் தெய்வமாக ஒரு படத்தை எடுக்க உள்ளார்.

இந்த நிலையில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சொர்க்கவாசல் என்கின்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!