தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் திரை பின்பலம் எதுவுமே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனது திறமையாலும் கனவாலும் இன்று திரைத்துறையில் நட்சத்திர நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். முதன் முதலில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம் ஆனார்.
இவர் தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி காட்டியதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலில் 2012 ஆம் ஆண்டு மெரினா திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் சிவகார்த்திகேயன்.
பின்னர் தனுஷ் உடன் 3 படம் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. தொடர்ந்து மனங்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன், காக்கிசட்டை, மான்கராத்தே, வேலைக்காரன், நம்ம வீட்டு பிள்ளை, மாவீரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து இன்று நட்சத்திர நடிகராக முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார்.
தற்போது அவரது நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்து நெட்டிசன்ஸ் பலரும் அந்த வயதிலே இவர்களுக்குள் காதலா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்: பிரம்மாண்டமாக நடந்த நடிகரின் 70-வது திருமணம் – குவியும் வாழ்த்துக்கள்!
சிவகார்த்திகேயனின் மாமா மகள் தான் ஆர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தில் ஆர்த்தி, சிவகார்த்திகேயனுடன் சிவகார்த்திகேயனின் அக்காவும் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வேகமாக பரவி வருகிறது.