விவசாயிகளால் விஜய்க்கு சிக்கல்? தவெக மாநாட்டிற்கு ரூல்ஸ்!

Author: Hariharasudhan
22 அக்டோபர் 2024, 12:27 மணி
Quick Share

தவெக மாநாட்டுத் திடலுக்குள் அக்கட்சி நிர்வாகிகளுக்கே பாதுகாப்பு ஊழியர்கள் அனுமதி மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். இதனையடுத்து, தவெக கொடி மற்றும் கட்சிப் பாடலையில் நிர்வாகிகள் முன்னிலையில் அவர் வெளியிட்டார். இந்த நிலையில் தான் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரத்தில் தவெக மாநாடு நடைபெற உள்ளது.

இவ்வாறு நடைபெறுகிற மாநாட்டிற்காக பிரமாண்ட திடல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 80க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் திடல் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த மாநாட்டுத் திடல் அமைக்கும் இடத்தில் உள்ள கிணறு மரப்பலகைகளால் மிகவும் பாதுகாப்ப்பாக மூடப்பட்டுள்ளது. மேலும், தவெக தலைவர் விஜய் உள்பட முக்கிய நிர்வாகிகள் அமரும் வகையில் மிகப்பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், மேடையில் இருந்தவாறு தொலைதூரம் இருக்கும் தொண்டர்களைச் சந்திக்கும் வகையில் ரேம்ப் வாக் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரேம்ப் வாக் மேடையில் விஜய் சென்று, தொண்டர்களுக்கு கை காட்டி, கை குலுக்கிவிட்டு வருவார் என்றும், நடந்து கொண்டே பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அங்கு சுமார் 100 அடி கொடிக்கம்பம் ஒன்று அமைக்கும் திடலும் அமைக்கப்பட்டு வருகிறது.

Maanaadu place

இவ்வாறு கொடிக்கம்பத்திற்கு வரும் விஜய், அங்கு தொண்டர்கள் சூழ தவெக கொடியை ஏற்றி வைத்துவிட்டு, பின்னர் ரேம்ப் வாக் மேடை வழியே பிரதான மேடைக்கு அவர் செல்ல உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை பெய்தது. இதனால் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டிருந்த இடம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. இருப்பினும், அங்கு தொடர்ந்து மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 70 சதவீத மாநாட்டுப் பணிகள் நிறைவடைந்ததாக கூறப்படும் நிலையில், திடலைச் சுற்றிலும் இரும்பு கேட்டுகள் அமைக்கப்பட்டு, அங்கு தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், தவெக மற்ற நிர்வாகிகளை மாநாட்டுத் திடலுக்குள் அனுமதிக்கவில்லை என்றும், நேரடியாக மாநாடு நடைபெறும் அன்றே வர வேண்டும் எனவும் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ரகசிய சந்திப்பால் கர்ப்பமான பிரபல நடிகை.. அரசியல் வாரிசு அழுத்தத்தால் கருக்கலைப்பு!

அது மட்டுமின்றி, மாநாட்டுத் திடலுக்கு அடுத்துள்ள விளைநிலங்களுக்குச் செல்ல முடியவில்லை என அப்பகுதி விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். இதனையடுத்து அங்கு ஆய்வு செய்த விக்கிரவாண்டி வருவாய்த்துறை அதிகாரிகள், அங்கு போடப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும், தவெக மாநாட்டுக்கு அனைவரும் ஆயத்தமாகும்படி விஜய் தொண்டர்களுக்கு இருமுறை கடிதம் எழுதியிருந்தார்.

  • விவசாயிகளால் விஜய்க்கு சிக்கல்? தவெக மாநாட்டிற்கு ரூல்ஸ்!
  • Views: - 72

    0

    0

    மறுமொழி இடவும்