புகழ்பெற்ற வர்த்தகத் தலைவரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் எமரிட்டஸ் தலைவருமான ரத்தன் டாடா அக்டோபர் 9ம் தேதி காலமானார். அவருக்கு வயது 86. அவரது அமைதியான தலைமையின் மூலம், ரத்தன் டாடா $5-பில்லியன் குழுவை 100 நாடுகளில் செயல்பாடுகளுடன் $100-பில்லியனாக மாற்றியது மட்டுமல்லாமல், இந்தியாவின் கட்டமைப்பை வடிவமைத்தார்.
தனக்கு சொந்தமான ஒவ்வொரு வணிக முயற்சியிலும் அவர் இந்தியாவை முதன்மைப்படுத்தினார். ரத்தன் டாடா தனது வணிக புத்திசாலித்தனத்தால் பிரகாசித்தார். வணிகம் சார்ந்த திறமைசாலியாக இருந்தது மட்டுமல்லாமல் சிறந்த மனிதராகவும் ரத்தன் டாடா பார்க்கப் பட்டார்.
ஏழை எளிய மக்களுக்கு உதவிகளையும் செய்து மக்களின் மனதில் இடத்தைப் படித்தார். வணிக ரீதியாக அவரது திட்டங்களும்,தொழில்களும் முன்னிலையில் இருந்தாலும் கூட ரத்தன் டாடாவின் எண்ணங்கள் எப்போதும் எளிய மக்களையும் அவர்களின் வாழ்க்கை அமைப்புகளையும் சுற்றி இருந்தது.
இதனிடையே ரத்தன் டாடாவின் மரணம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று வரை பலரால் அவரது மரணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பலரும் ரத்தன் டாடாவின் நற்குணங்களை பற்றி பேசி வருகிறார்கள். இந்த நிலையில் கவிஞர் வாலி இரத்தன் டாட்டா உடனான ஒரு சந்திப்பை கூற்றி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் ஒரு நாள் பயங்கர இடி, மழை, மின்னல் அந்த மழையிலும் நான் பீச் ஓரமா நடந்து வந்து கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு கார் என்னுடைய அருகே வந்து நின்றது. உடனே காரின் கண்ணாடி இறக்கி யங் பாய் நீ எங்கே போற வா கொண்டு போய் இறக்கி விடுகிறேன் எனக்கூறி நான் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு போய் இறக்கி விட்டார்.
இதையும் படியுங்கள்: கழண்டு விழுறது கூட தெரியாம காட்டுறியேமா? வேதிகாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!
உடனே நான் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு உங்களது பெயர் என்ன என கேட்டவுடன். மக்கள் எல்லோரும் என்னை தாத்தா என அழைப்பார்கள் என கூறினார். அந்த அளவுக்கு மிகச்சிறந்த மனிதாபிமானம் கொண்ட மனிதர் தான் ரத்தன் டாட்டா என கவிஞர் வாலி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இந்த வீடியோ கேட்டதும் பலருக்கும் சிலிர்த்து போய்விட்டதாக இந்த வீடியோவை ஷேர் செய்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.